Google

யாழ் இந்துக் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முதலிடம் பெற்றது செல்லத்துரை இல்லம்…

Written on:February 24, 2015
Comments are closed

sports465யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 24.02.2015 அன்று கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமயில் பிரதம விருந்தினராக R.C இராமநாதன் (Purchasing Manager, Lim & Co, Germany) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நண்பகல் 1.30 மணியளவில் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விருந்தினர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவ முதல்வர்கள் கல்லூரிக் கொடியினை ஏந்தியவாறு அணி நடையின் தலைமை பெறுப்பினை பெற்று வர நாகலிங்கம், சபாபதி, பசுபதி, காசிப்பிள்ளை, செல்லத்துரை இல்லங்கள் தத்தமது வர்ண நிறக்கொடிகளுடன் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்,

எமது கல்லூரியின் பெருமை பொருந்திய நீலம் வெள்ளை கொடியானது 5 இல்லங்களினைச் சேர்ந்த இல்ல தலைவர்களினால் எடுத்துவரப்பட்டு  கொடிக் கீதம் இசைக்க கல்லூரி சிரேஷ்ட மாணவ முதல்வனால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இல்லக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.  5 இல்லக் கொடிகளும் மோட்டார் வண்டி பவனியாக மைதானத்தினை சுற்றி வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டி விதிகளுக்கமைவாக கல்லூரி சிரேஸ்ட மாணவ முதல்வனின் வழிகாட்டலில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  ஒலிம்பிக் தீபமானது கல்லூரி மெய்வல்லுனர் சாதனையாளரினால் எடுத்து வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தரம் 6 மாணவர்களின் இடைவேளை நிகழ்வும், உடற் பயிற்சி அணியினரின் சாகச நிகழ்வுகளும், பளு தூக்கும் அணியினரின் பளு தூக்கும் நிகழ்வும்  விழாவினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.

இன்று நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் செல்லத்துரை இல்லமானது 509 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து நாகலிங்கம் இல்லம் 483 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பசுபதி இல்லம் 441 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், சபாபதி இல்லம் 408 புள்ளிகளைப் பெற்று 4 ஆம் இடத்தினையும், காசிப்பிள்ளை இல்லம் 363 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி செல்வகுமாரி இராமநாதன் அவர்கள் வழங்கி கெளரவித்தார், அதனை தொடர்ந்து  நன்றி உரையுடன், கல்லூரி கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Sorry, the comment form is closed at this time.