Google

யாழ் இந்துவில் முன்னாள் அதிபர் திரு.இ.சபாலிங்கம் அவர்கள் நினைவாக 400 இருக்கைகள் கொண்ட நவீன அரங்கம்

Written on:February 12, 2015
Comments are closed

aaaதிறப்பு விழா:-03 சித்திரை 2015
பிரதம விருந்தினர்:-திரு.எஸ்.பொன்னம்பலம்
முன்னாள் அதிபர்
யாழ் இந்துக் கல்லூரி

முன்னாள் அதிபர் திரு.இ.சபாலிங்கம் அவர்களின் நினைவாக 400 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பப்பணி 2014ம் ஆண்டு பங்குனி மாதம் 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ‘சபாலிங்கம் அரங்கம்’ செயற்றிட்டத்திற்கான செலவுகள் ரூபா 16 மில்லியனாக மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடவேலைகள் தற்சமயம் முடிவுறும் நிலையில் இருப்பதுடன்2015ம் ஆண்டு சித்திரை மாதம் 03ம் திகதி பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் ஐக்கிய ராச்சியம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய வைத்திய கலாநிதி.ச.ஜோதிலிங்கம் அவர்கள் தனது தந்தையராகிய மதிப்புக்குரிய எமது கல்லூரி முன்னாள் அதிபர் மறைந்த திரு.இ.சபாலிங்கத்தின் நினைவாக கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக இவ்வரங்கத்தை நிர்மாணித்துத்தர முன்வந்திருந்தார். இலங்கையின் தேசியப் பாடசாலைகளில் ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வட மாகாணத்தில் இவ்வாறான நவீன அரங்கத்தை கொண்டுள்ள முதலாவது பாடசாலை என்ற பெருமையைப் பெறுகின்றது. இது இளைஞர் சமுதாயக்தின் கல்வியை நிச்சயமாக மேம்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

மறைந்த திரு. இளையதம்பி சபாலிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் பழைய மாணவரும் முன்னாள் அதிபருமாவர். இவர் 1919.02.04 திகதி பிறந்து 1988.08.03 திகதி வரை இவ்வுலகில் வாழ்ந்திருந்தார். மறைந்த திரு.இ.சபாலிங்கம்(விஞ்ஞானமானி-இலண்டன் பட்டப்பின் படிப்பு பயிற்றப்பட்டவர்-இலங்கை) தனது ஆரம்பக் கல்வியை யா/நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1923 ஆண்டு தொடக்கம் 1928 ஆண்டு வரையும் மலேசியா, கோலாலம்பூர் விக்ரோறியா கல்வி நிறுவனத்தில் 1929 ஆணடு தொடக்கம் 1931 ஆணடு வரையும் கல்வி கற்றார். 1932 ம் ஆண்டு தொடக்கம் 1937 ம் ஆணடு வரை யாழ் இந்துக் கல்லூரியில் இடைக்கல்வியை தொடர்ந்தார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிமாணிப்பட்டம் பெற்று அரசாங்க சேவையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக நியமனம் பெற்றார்;. சிறிது காலத்தின் பின்னர் அவர் ஆசிரிய சேவையை தேர்ந்தெடுத்து யாழ்ப்பாணச் சமூகத்திற்கு கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றினார். இவர் யா/கொக்குவில் இந்துக் கல்லூரியில் உப அதிபராக இருந்தபோது 1964 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் இந்தக் கல்லூரியின் தெரிவுத்தர அதிபராக 1971ல் பதவியேற்றார்.

மறைந்த திரு.இ.சபாலிங்கம் அவர்கள் திறமையான நிர்வாகியாகவும்இ ஏழைச்சிறார்களின் கற்றல் தேவைகளுக்கான பணவுதவி செய்து ஓர் ஏழைப் பங்காளனாகவும் திகழ்ந்தார்.அவர் ஒரு ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து கல்வித்துறைக்கு மட்டுமல்லாது ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கும் விளையாட்டுத்துறைக்கும் சேவை செய்தார். அவர் வெற்றிகரமான நிர்வாகியாகவும்இ ஆசிரிய தொழிற்சங்கவாதியாகவும் முன்னணி விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். அவர் அதிபராக மாணவர்களின் நலன்களிலும் அவர்களுக்கிடையே நல்லொழுக்க விழுமியங்களை ஊட்டிவளர்த்ததில் ஈடுபாடு கொண்டார். தனது செவைக்காலத்தில் கல்லூரியின் தரத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்று கல்லூரிக்கு பெயரையும் புகழையும் தேடிக்கொடுத்தார். ஓர் பெருந்தன்மையுடைய அதிபராக அனைத்துப் பிரச்சினைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு இடர்கள் ஏற்பட்ட சமயங்களில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார். அவர் மாணவர்களாலும்இ பெற்றோர்களாலும். சகநண்பர்களாலும் மதிக்கப்பட்ட ஓர் பெருந்தொகை.

Sorry, the comment form is closed at this time.