Google

மாணவர்களுக்கான வைத்திய பரிசோதனை (படங்கள் இணைப்பு)

Written on:April 30, 2012
Comments are closed

இன்றைய தினம் (30.04.2012) அன்று எமது கல்லூரியில் தரம் 7, தரம் 10 மாணவர்களுக்கு  Dr.V. யோகேஸ்வரன் அவர்களால் இதயம், சுவாசப் பிரச்சினைகள் தொடர்பான வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 500 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்திருந்தார்கள். அத்துடன் இந் நிகழ்விற்கு சுகாதார திணைக்களத்திலிருந்து சுகாதர பரிசோதகர், மேற்பார்வை சுகாதர பரிசோதகர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
மேலும் இந் நிகழ்வில் மாணவர்களுக்கு நிறை, உயரம், போசாக்கு, குருதிச்சோகை தொடர்பாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இச் செயற்றிட்டமானது யாழ் இந்துக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவைப் பிரிவினூடாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.





Sorry, the comment form is closed at this time.