Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற 35ஆவது வீதியோட்டம் – 2015

Written on:February 6, 2015
Comments are closed

marathannn037இன்றைய தினம் (06.02.2015) காலை 6.00 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரியின் 2015 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான 35ஆவது வீதியோட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு, முதுநிலைப் பிரிவு எனும் இரு கட்டங்களாக நடைபெற்றன. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் ஏறத்தாள 250 மாணவர்கள் பங்குபற்ற இருந்தார்கள். இப் போட்டிகளை யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் திரு.சண்.தயாளன் அவர்கள் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இப் போட்டியில் இளநிலைப் பிரிவில் பசுபதி இல்லம் முதலாம் இடத்தையும், நாகலிங்கம் இல்லம் இரண்டாம்,மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இதே போன்று முதுநிலைப் பிரிவிலும் பசுபதி இல்லம் முதலாம் இடத்தையும்,செல்லத்துரை இல்லம் இரண்டாம் இடத்தையும், பசுபதி இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இம்முறை கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இளநிலைப்பிரிவு :

1) வி.சஜீவன் ( பசுபதி இல்லம்)
2) நி.ஆதவன் (நாகலிங்கம் இல்லம்)
3) ந.பானுஜன் (நாகலிங்கம் இல்லம்)

முதுநிலைப்பிரிவு :

1) எஸ்.சுபராஜ் ( பசுபதி இல்லம்)
2) எஸ்.ஜெசிந்தன் (செல்லத்துரை இல்லம்)
3) தோ.நிரோஜன் (பசுபதி இல்லம்)

Sorry, the comment form is closed at this time.