Google

யாழ் இந்துவில் நடைபெற்ற தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2015

Written on:January 21, 2015
Comments are closed

newstudents005இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும்,  தரம் 6 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.வி.கைலாயபிள்ளை (தலைவர்- யாழ் இந்துக் கல்லூரி அறக்கட்டளை நிதியம்-கொழும்பு)  அவர்கள் கலந்து கொண்டு கொண்டார். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், திரு.சுசீந்திரன் (மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர்), மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையின் முகாமையாளர் போன்றோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன்  வடமாகாண சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய சுவாமியும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தார்.

இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் பின்னர் பிரதம விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவித்து பான்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக தரம் 6 மாணவர்களும் கே.கே.எஸ் வீதி வழியாக எமது கல்லூரியின் முன் வாயிலூடாக பிரார்த்தனை மண்டபத்தினுள் வரவேற்கப்பட்டனர். அதன் பின் வருகை தந்திருந்த சுவாமியினால் ஆசியுரையும், அதே போன்று தலைமையுரையினை பிரதி அதிபர் திரு.ச.நிமலன் அவர்கள் நிகழ்த்தினார்கள். பின்னர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களது உரையும் பின்னர்  அதனைத் தொடர்ந்து பலரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

இதன் பிற்பாடு யாழ் மக்கள் வங்கி கிளையினரால் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் அனைவரும் தமது புதிய வகுப்பறைகளுக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.

newstudents043 newstudents042 newstudents041 newstudents040 newstudents039 newstudents034 newstudents029 newstudents030 newstudents035 newstudents036 newstudents031 newstudents032 newstudents033 newstudents038 newstudents037 newstudents028 newstudents023 newstudents027 newstudents022 newstudents017 newstudents016 newstudents021 newstudents026 newstudents025 newstudents020 newstudents024 newstudents019 newstudents014 newstudents015 newstudents018 newstudents004 newstudents009 newstudents010 newstudents005 newstudents006 newstudents011 newstudents012 newstudents007 newstudents008 newstudents013 newstudents003 newstudents002 newstudents001

 

 

 

 

 

 

 

 

 

Sorry, the comment form is closed at this time.