Google

தம்புள்ளயில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போறியில் யாழ் இந்து சாரணர்களும் பங்பேற்பு (படங்கள் இணைப்பு)

Written on:April 10, 2012
Comments are closed

இலங்கையில் முதன்முறையாக நடைபெற்ற ஆசிய பசுபிக் பிராந்திய சாரணர் ஜம்போறியிலும், இலங்கையின் சாரணர் நூற்றாண்டு விழாவிலும் பங்குபற்றிய இரட்டை பெருமையை இங்கு பங்குபற்றிய ஒவ்வொரு சாரணர்களும் பெற்றுக்கொள்கின்றனர். இந் நிகழ்வு ஏப்பிரல் 1ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை தம்புள்ள கண்டலகம பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்வில் 6000 இற்கும் மேற்பட்ட சாரணர்கள் பங்குபற்றி இருந்தனர். இதில் 1500 இற்கும் மேற்பட்ட சாரணர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.அத்துடன் இந்நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து 11 சாரணர்களும், IST சாரணர்கள் 3 பேரும், பொறுப்பாசிரியர் ஒருவர் உட்பட மொத்தமாக 15 பேர் பங்குபற்றியிருந்தார்கள். ஜம்போறியின் இறுதியில் சரணர்கள் தேயிலை தொழிற்சாலைகள், நீர்வீழ்ச்சிகள், கோயில்கள், பேராதனை பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டிருந்தனர்.

 

Sorry, the comment form is closed at this time.