Google

சர்வதேச மட்ட ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துவிற்கு மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம்…

Written on:October 15, 2014
Comments are closed

loy0022அண்மையில் இந்தோனேசியா பாலி தீவில் நடைபெற்ற சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் இருவர் பங்குபற்றினர். இதில் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு நடேசமூர்த்தி சிவமைந்தனும், கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கேதீஸ்வரன் கார்த்தீபனும் பங்குபற்றியிருந்தனர்.

இப் போட்டியில் நடேசமூர்த்தி சிவமைந்தன் இலங்கை அணிக்கு ஒரு வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுக் கொடுத்ததுடன் யாழ் இந்துக் கல்லூரியின் முத்திரையினை மீண்டும் சர்வதேச மட்டத்தில் பதித்துள்ளார்.

இக் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு இலங்கையில் இருந்து 13 மாணவர்களும், விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு 10 மாணவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

loy0001 loy0005 loy0007 loy0013 loy0017 loy0022

Sorry, the comment form is closed at this time.