Google

யாழ் இந்துவில் ஜனாதிபதியினால் மகிந்தோதய ஆய்வு கூடம் திறந்து வைக்கப்பட்டது…

Written on:October 13, 2014
Comments are closed

lab0096இன்றைய தினம் (13.10.2014) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார். வருகை தந்த அவரை பாடசாலை சமூகம் வரவேற்று நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றது. அத்துடன் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை அவர்  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

இதன் பின்னர் ஆய்வு கூடங்களுக்கு  சென்று மாணவர்களுடைய கணித விஞ்ஞான பரிசோதனைகளை பார்வையிட்டார்.  அதன் பின்னர் அவர் ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து படங்களை எடுத்துக் கொண்டார்.

பின்னர் அரங்கில் கூடியிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அயல் பாடசாலை ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். இதன் பின்னர் கல்லூரி அதிபரால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கு முதல் வருகை தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் மகிந்தோதய ஆய்வு கூடத்தினை பார்வையிட்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

lab0009 lab0012 lab0013 lab0018 lab0021 lab0024 lab0028 lab0034 lab0044 lab0048 lab0049 lab0051 lab0064 lab0068 lab0052 lab0053 lab0069 lab0072 lab0054 lab0055 lab0074 lab0077 lab0093 lab0095 lab0078 lab0081 lab0096 lab0097 lab0091 lab0092 lab0101 lab0102 lab0110 lab0115 lab0103 lab0104 lab0116 lab0105 lab00117 lab0118 lab0107 lab0119 lab0139 lab0146 lab120 lab0122 lab0155 lab0160 lab0127 lab0134 lab0163 lab0165 lab0179 lab0182 lab0168 lab0173 lab0185 lab0189 lab0177 lab0178 labs0265

Sorry, the comment form is closed at this time.