Google

யாழ் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வும் விஜயதசமி விழாவும்…

Written on:October 3, 2014
Comments are closed

nava0156இன்றைய தினம் (03.10.2014) யாழ் இந்துக் கல்லூரியில் விஜயதசமி நிகழ்வும், 125 ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றன. முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வுடன் 125 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து வைரவப் பெருமானுக்கு விசேட அபிசேகம் நடைபெற்றது. இந் நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் கே.கே.எஸ் வீதி நுழைவாயில்களினூடாக பிரார்த்தனை மண்டபத்துக்கு விருந்தினர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் அங்கு விஜயதசமி நிகழ்வின் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. இந் நிகழ்வில் அதிபர் உரையும் மாணவர்களுடைய கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. இந் நிகழ்வில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்து மாமன்றத்தினால் ”நவமலர்” எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது.

இந் நிகழ்வினை தொடர்ந்து சிவஞான வைரவர் ஆலயத்தில் ஏடு தொடக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஏட்டினை தொடக்கி வைத்தார்கள்.

இதன் பின்னர் வைரவப் பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவு பெற்றது.

nava0008 nava0017 nava0037 nava0027 nava0026 nava0025 nava0022 nava0039 nava0052 nava0064 nava0067 nava0053 nava0044 nava0045 nava0054 nava0070 nava0071 nava0055 nava0046 nava0047 nava0058 nava0072 nava0073 nava0081 nava0091 nava0092 nava0083 nava0076 nava0077 nava0086 nava0094 nava0095 nava0087 nava0079 nava0080 nava0089 nava0098 nava0100 nava0110 nava0119 nava0120 nava0111 nava0103 nava0105 nava0107 nava0115 nava0114 nava0121 nava0124 nava0125 nava0116 nava0108 nava0127 nava0138 nava0156 nava0163 nava0140 nava0128 nava0129 nava0141 nava0164 nava0166 nava0147 nava0130 nava0134 nava0148 nava0171 nava0173 nava0200 nava0205 nava0177 nava0195 nava0206 nava0211 nava0198 nava0199 nava0214 new0037 nava0241 nava0219 nava0223 nava0226 nava0231 new0030 nava0246 nava0244 new0039 new0040 new0041 new0044 new0035 nava0238 new0045 new0046 new0049 new0051 new0056

 

Sorry, the comment form is closed at this time.