Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்…

Written on:October 1, 2014
Comments are closed

tamilday0084இன்றைய தினம் (01.10.2014) யாழ் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பழைய மாணவனும், சாந்தியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், ஆசிய பிராந்திய சிறுவர் பாதுகாப்பு ஆலோசகருமான திரு.ஜெ.தற்பரன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் நிகழ்வும் அதனை தொடர்ந்து இறைவணக்கமும் இடம் பெற்றது. அதன் பின்னர் வரவேற்புரையும் அதனை தொடர்ந்து தலைவர் மைத்திரேஜன் சர்மாவின் தலைமையுரையும், அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது.

பின்னர் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் பொறுப்பாசிரியர் திரு.கு.மகிழ்ச்சிகரனுடைய உரையும் அதன் பின் பிரதம விருந்தினர் உரையும் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து அண்மையில் சிறுவர் செயற்பாட்டு கழகத்தினால் கல்லூரியில் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதம விருந்தினராலும், அதிபரினாலும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் மாணவர்களுடைய கலைநிகழ்வுகள் நடைபெற்றன. முதல் நிகழ்வாக மாணவர்களுடைய பல்லியம் எனப்படும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் நடன நிகழ்வு, பாடல், கவிதை, நாடகம் போன்றனவும் இடம் பெற்றது. இறுதியாக நடைபெற்ற நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றன.

child0001 child0022 child0023 child0030 child0043 child0045 child0047 child0049 child0051 child0052 child0058 child0063 child0067 child0070 child0076 child0084 child0085 child0092 child0104 child0107 child0131 child0142 child0149 child0151 child0152 child0155 child0157 child0159 child0160 child0161 child0162 child0165 child0167 child0180 child0187 child0192 child0198 child0203 child0209 child0215 child0244 child0245 child0250 child0260 child0263 child0268 child0273 child0278 child0281 child0287 child0288 child0290 child0291 child0294 child0303 child0305 child0309 child0313 child0318 child0320 child0325

Sorry, the comment form is closed at this time.