Google

யாழ் இந்துவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மொழித் தினம் – 2014

Written on:September 19, 2014
Comments are closed

tamilday0266இன்றைய தினம் (19.09.2014)  யாழ் இந்துக் கல்லூரியில் தமிழ் மொழித் தினம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனும், யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட உதவிப் பதிவாளருமான திரு.இ.சர்வேஸ்வரா அவர்களும் அவரது பாரியாரும் கலந்து கொண்டனர்.

முதன் நிகழ்வாக தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற வில்லுப்பாட்டு குழுவினருக்கு பதக்கங்கள் அணிவித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு கஸ்தூரியார் வீதி சந்தியில் இருந்து குமாரசுவாமி மண்டபம் நோக்கி பெற்றோர்கள் மாணவர்கள் சகிதம் மங்கள வாத்தியம் இசைக்க  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

இதன் பின்னர் மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக இறை வணக்கத்தினை தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தமிழ் தாய் வாழ்த்து, தமிழ் தின வாழ்த்து ஆகியன இடம் பெற்றன. இதன் பின்னர் யாழ் இந்து மாணவர்களது சிறப்பான வரவேற்பு நடனம் அரங்கேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து வரவேற்புரையும்,அதன் பின்னர் தலைமையுரையும் பின் கல்லூரி அதிபருடைய ஆசியுரையும் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து பொறுப்பாசிரியர் உரையும் பின்னர் பிரதம விருந்தினர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்களது உரையும் இடம் பெற்றது.

பின்னர் பிரதம விருந்தினராலும், அவரது பாரியார் மற்றும் அதிபரினாலும் கோட்ட மட்ட வலய மட்ட மாகாண மட்ட தேசிய மட்ட தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதன் நிகழ்வாக குழு இசையும் அதனை தொடர்ந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மாணவனது பேச்சு போட்டியும் இடம் பெற்றது. இதன் பின் தேசிய மட்டத்தில் முதல் இடம் பெற்ற ”தக்கன் வதம்” எனும் வில்லுப்பாட்டு நிகழ்வும் கல்லூரி சமுகத்தின் முன் அரங்கேற்றப்பட்டது.

இதனையடுத்து ”இன்றைய காலகட்டத்தில் தமிழ் வளர்க்கப்பட்டு வருகின்றதா இல்லை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதா” எனும் தலைப்பில் கல்லூரி விவாத மாணவர்கள் இருபகுதியாக அமர்ந்திருந்து விவாதத்தில் ஈடுபட்டனர்.

இறுதியா நாடக நிகழ்வொன்றும் நடாத்தப்பட்டது. அதனையடுத்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவடைந்தது.

tamilday0086 tamilday0087tamilday0090tamilday0097tamilday0100tamilday0103tamilday0105tamilday0111tamilday0122tamilday0130tamilday0131tamilday0138tamilday0148tamilday0152tamilday0158tamilday0160tamilday0163tamilday0167tamilday0170tamilday0173tamilday0175tamilday0180tamilday0182tamilday0185tamilday0188tamilday0191tamilday0199tamilday0207tamilday0210tamilday0216tamilday0217tamilday0228tamilday0232tamilday0235tamilday0246tamilday0248tamilday0251tamilday0256tamilday0259tamilday0264tamilday0266tamilday0275tamilday0279tamilday0284tamilday0289tamilday0295tamilday0303tamilday0305tamilday0309tamilday0312tamilday0315tamilday0321tamilday0329tamilday0333tamilday0335tamilday0341tamilday0346tamilday0351tamilday0353tamilday0358tamilday0363tamilday0366

 

 

tamilday0372 tamilday0376 tamilday0379 tamilday0383 tamilday0397 tamilday0399 tamilday0401 tamilday0404 tamilday0408 tamilday0414 tamilday0423 tamilday0435 tamilday0438 tamilday0447

Sorry, the comment form is closed at this time.