Google

யாழ் இந்துவில், தேசிய மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கும் ( Weight Lifting) போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு…

Written on:September 17, 2014
Comments are closed

x (21)தேசிய மட்டத்தில் நடைபெற்ற பளு தூக்கும் ( Weight Lifting) போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து மாணவர்களுக்கு இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.

இப்பளு தூக்கும் போட்டியில் 17 வயதுப் பிரிவில் விதுசன் தங்கப் பதக்கத்தினையும், 19 வயதுப் பிரிவில் கிருசிகன் வெள்ளிப் பதக்கத்தினையும்,  17 வயதுப் பிரிவில் மிதுன், பபிலன் ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினையும், 19 வயதுப் பிரிவில் அபிசேக் வெண்கலப் பதக்கத்தினையும், 17 வயதுப் பிரிவில் மைத்திரேஜன் சர்மா, சிறிசாந், அஜித்ராம் ஆகியோர் வெண்கலப்  பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற 8 மாணவர்களுக்கும் மாலை அணிவித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு கஸ்தூரியார் வீதி சந்தியில் இருந்து கல்லூரி மைதானம் நோக்கி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.  அதன் பின்னர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களினை வாழ்த்தி கல்லூரி அதிபர், வடமாகாண உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.சத்தியபாலன், யாழ் வலய உடற்கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தயாளன், யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் Dr.தேவநேசன், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் திரு.அருள்குமரன், யாழ் இந்துவின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் திரு. வாசவன், பளுதூக்கல் விளையாட்டின் பொறுப்பாசிரியர் திரு.திருமாறன் போன்றோர் உரையாற்றினர்.

இதன் பின்னர் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களது பெற்றோர்களும் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

இவர்களின் வெற்றிக்கு பொறுப்பாசியரும், பயிற்றுனருமான ஆசிரியர் திரு.திருமாறன் அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்து இவர்களை வழிப்படுத்தினார்.

இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் செயற்பாட்டினை மேலும் அதிகரிப்பதற்காக திரு.செவ்வேள் அவர்களினால் ரூபா 20,000 கல்லூரி அதிபர் ஊடாக யாழ் பழைய மாணவர் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

weight0059 weight0077 weight0080 weight0082 weight0083 weight0089 weight0094 weight0101 weight0103 weight0109 weight0113 weight0119 weight0121 weight0125 weight0130 weight0134 weight0136 weight0138 weight0147 weight0152 weight0158 weight0164 weight0171 weight0175 weight0176 x (2) x (11) x (12) x (15) x (21)

Sorry, the comment form is closed at this time.