Google

யாழ் இந்து மென்பந்து கிரிக்கட் அணி யாழ் வலய சம்பியனாக தெரிவு.

Written on:March 23, 2012
Comments are closed

தற்போது நடைபெற்று வரும் யாழ் வலய பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஸ்ரான்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இவ் இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி மத்திய கல்லூரி அணியை எதிர்கொண்டது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்திய கல்லூரி 8.4 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் பிருந்தன் hat trick சாதனையை நிலைநாட்டியதுடன் அவர் 4 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார். அதேபோன்று பிரசாந்தும் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பின்னர் 24 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய யாழ் இந்து அணி 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 27 ஓட்டங்களை பெற்று மத்திய கல்லூரியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதனால் யாழ் இந்து வலயமட்ட சம்பியனாகியதுடன் மாவட்டமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளது. இப் போட்டிகளுக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியின் மென்பந்து கிரிக்கட் அணியின் பொறுப்பாசிரியர் திரு.செல்வகுமார் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.