Google

யாழ் இந்துவிற்கு புதிய பதில் அதிபராக திரு.ஐ.தயானந்தராஜா நியமிக்கப்பட்டுள்ளார்…

Written on:August 22, 2014
Comments are closed

Jaffna_Hindu_Principal_Iyampillai_Thayanandarajah_Largeஇன்றைய தினம் (22.08.2014) யாழ் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ஐயம்பிள்ளை தயானந்தராஜா ( B.Com Hons, PGDE, PGDEM, MEd) அவர்கள் கடைமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். கல்லூரி நிர்வாகம் தொடர்பான சகல பொறுப்புக்களையும் யாழ் இந்துவின் முன்னாள் அதிபர் திரு.வீ.கணேசராசா தற்போது பதில் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ஐ.தயானந்தராஜா அவர்களிடம் கையளித்தார்.

இதற்கு முன்னர் திரு. ஐ.தயானந்தராஜா அவர்கள் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் (தேசிய பாடசாலை) அதிபராக கடைமையாற்றியவர் என்பதும் இவர் யாழ் இந்துவின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10609712_10204644116489209_5882584654147723666_n 10580227_10204644190451058_1623620935428882989_n 10606105_10204644192211102_1835611452620806340_n

1908403_10204644191611087_2804470422299725593_n

Sorry, the comment form is closed at this time.