Google

யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் கழகத்தினால் நடாத்தப்பட்ட கல்லூரி அதிபரின் பிரியாவிடை வைபவம்…

Written on:August 12, 2014
Comments are closed

inthu068அண்மையில் யாழ் இந்துக் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்களுடைய பிரியாவிடை வைபவம் யாழ் இந்துக் கல்லூரி விடுதி மண்டபத்தில் ஆசிரியர் கழகத்தினால் நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் ஆசிரியர்களும் மற்றும் இளைப்பாறிய ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர். இந் நிகழ்வினை ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.சிறீக்குமார் ஆசிரியர் அவர்கள் நடாத்தினார்.

இந் நிகழ்வில் கழகத்தின் தலைவர் திரு.சிறீக்குமார் ஆசிரியரும், பிரதி அதிபர்கள் சார்பில் திரு.நிமலன், திரு.ஞானதேசிகன் அவர்களும் ஆசிரியர்கள் சார்பில் திரு.சிவராஜா ஆசிரியரும் இளைப்பாறிய ஆசிரியர்கள் சார்பில் திரு.தவராஜா ஆசிரியரும் தமது உரையினை நிகழ்த்தினார்கள். இதன் பின்னர் ஓய்வு பெற்றுச் செல்லும் கல்லூரி அதிபர்  திரு.வீ.கணேசராசா அவர்கள் உரையாற்றினார். இதன் பின்னர் மதிய உணவுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றன.

inthu060 inthu061 inthu062 inthu065 inthu066 inthu067 inthu068 inthu069 inthu070 inthu071 inthu073 inthu074

Sorry, the comment form is closed at this time.