Google

யாழ் இந்துவில் 75 ஆவது ”இந்துவின் இளைஞன்“ மலர் வெளியிடப்பட்டது…

Written on:August 3, 2014
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியில் 02.08.2014 அன்று 75 ஆவது இந்து இளைஞன் மலர் வெளியீடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், வைத்தியருமான பேரானந்தராஜா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இம் மலரின் வெளியீட்டுரையினை யாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் திரு.மகேந்திரராஜா  நிகழ்தினார். அத்துடன் இம் மலருக்குரிய ஆய்வுரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீடத்தின் பீடாதிபதி திரு.வேல்நம்பி அவர்கள் நிகழ்த்தினார்.  இம் மலரின் முதல் பிரதியினை நிகழ்வின் பிரதம விருந்தினர் அவர்கள் வெளியிட்டு வைக்க வைத்திய நிபுனர் திரு.லக்ஸ்மன் அவர்கள்  பெற்றுக்கொண்டார்.  இந் நிகழ்விற்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

inthu004 inthu005 inthu008 inthu014 inthu013 inthu012 inthu011 inthu010 inthu015 inthu018 inthu020 inthu031 inthu036 inthu037 inthu049 inthu050 inthu040 inthu042 inthu051 inthu055 inthu044 inthu045

Sorry, the comment form is closed at this time.