Google

சர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்கேற்கவுள்ளார்…

Written on:July 22, 2014
Comments are closed

அண்மையில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற National Mathematics and Science Olympiad  (N M S O) பரீட்சையில்   பங்குபற்றிய யாழ் இந்து மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் விஞ்ஞான பாட பரீட்சையில் சித்தியடைந்து  வெள்ளி பதக்கத்தினை பெற்றதுடன் சர்வதேச மட்டத்துக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்து Indonesia bali island நடைபெறவுள்ள International Mathematics and Science Olympiad  (I M S O) போட்டியில்  பங்குபற்றவுள்ளார். இவருடன் இலங்கையில் இருந்து 14 மாணவர்கள் சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவிருக்கிறார்கள்.

ஏற்கனவே மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் சென்ற வருடம் கணித பாட ஒலிம்பியாட் பரீட்சையில் சித்தியடைந்து  பிலிப்பைன்ஸில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ் இந்துவில் இருந்து இதே போட்டியில் பங்குபற்றிய மாணவன் தேவானந் அபிராம் எனும் மாணவன் தேசிய மட்டத்தில் 15 இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

olympiad009
olympiad012


Sorry, the comment form is closed at this time.