Google

யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது…

Written on:July 9, 2014
Comments are closed

valaivu089யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் (09.07.2014) புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது. இவ் விழாவானது எமது கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டார். இதனை விட ஆளுநரின் செயலாளரும்,பழைய மாணவனுமாகிய திரு.இளங்கோவன் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு.விவேகானந்தன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு.அருள்குமரன் மற்றும் கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின் விருந்தினர்கள் அனைவரும் பான்ட் வாத்தியத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் அழைத்து வரப்பட்டனர். அவ் இடத்திற்கு முன்னால் புதிதாக அமைய இருக்கின்ற முகப்பு வாயில் அலங்கார வளைவுக்கு அத்திபாரம் இடப்பட்டது.

valaivu001 valaivu008 valaivu015 valaivu024 valaivu026 valaivu027 valaivu028 valaivu029 valaivu038 valaivu039 valaivu046 valaivu049 valaivu053 valaivu058 valaivu065 valaivu066 valaivu068 valaivu069 valaivu076 valaivu082 valaivu085 valaivu087 valaivu089

 

Sorry, the comment form is closed at this time.