Google

மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரிக்கு ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள்

Written on:July 3, 2014
Comments are closed

imagesநடைபெற்று முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையேயான மெய்வல்லுநர் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலங்கள் அடங்கலாக ஒன்பது பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன. இதனை விடுத்து பல வீரர்கள் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றும் தகைமையை பெற்றுள்ளனர்.

இந்த வகையில் சீ.கஜலக்சன் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் ,விதுசன் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும் வ.ஜஸ்மினன் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் க.தனுசன் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும் ம.டக்சன் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அதேபோல் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சு.விஜிந்தன் முப்பாய்ச்சல் நிகழ்வில் வெள்ளிப் பதக்கத்தையும் கி.மோகனப்பிரசாத் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் த.டிலக்சன் வெண்கலப் பதக்கத்தையும் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 4 X 100அ அஞ்சல் ஓட்ட நிகழ்வில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டார். இதில் வட மாகாணத்தின் அனைத்து வயதுப்பிரிவிலும் சிறந்த வீரனாக வ.ஜஸ்மினன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .இவ்வீரர்களின் வெற்றிக்கு பாடசாலை அதிபர் , விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரின் வழிகாட்டலில் பயிற்சியினையும் பயிற்சி நெறிப்படுத்தலினையும் மெய்வல்லுநர் பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

10511170_778285252224400_8109426061546498726_n

Sorry, the comment form is closed at this time.