Google

யாழ் இந்து 16 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணி சென்.பற்றிக்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவு (படங்கள் இணைப்பு)

Written on:March 15, 2012
Comments are closed

தற்போது நடைபெற்று வரும் யாழ் வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற காலிறுதியில் பலமான யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடிய யாழ் இந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் யாழ் இந்து மற்றொரு பலம் வாய்ந்த அணியான சென்.பற்றிக்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக அமைந்திருந்த இப் போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டம் சமனிலையாக வர இறுதியில் இரு அணிகளுக்கும் தலா ஐந்து தண்ட உதைகள் வழங்கப்பட்டன. இதிலும் இரு அணிகளும் தலா மூன்று கோல்களை போட்டு மீண்டும் சமநிலைக்கு வர இறுதியாக இரு அணிகளும் ஒவ்வொரு தண்ட உதைகள் வழங்கப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திய யாழ் இந்து அணி கோலை போட்டது. பின்னர் சென்.பற்றிக்ஸ் அணி தமக்கு வழங்கப்பட்ட தண்ட உதையை தவறவிட யாழ் இந்து 1:0 எனும் அடிப்படையில்  சென்.பற்றிக்ஸ் அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

Sorry, the comment form is closed at this time.