Google

சிறப்பாக நடைபெற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா நிகழ்வு

Written on:July 4, 2014
Comments are closed

prize cam162யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 04.07.2014 அன்று கல்லூரி அதிபர் வீ. கணேசராசா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் Mr.R.Vickneswaran (FCA in Singapore and UK, FCMA UK, FCPA Australia) அவர்களும் அவரது பாரியார் Mrs Senthoorselvi Vickneswaran அவர்களும் அவர்களது பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரமும் அதனை தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம் பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2013 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார். பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2013ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் 350 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 64 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், 23மாணவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
prize cam011 prize cam017 prize cam021 prize cam023 prize cam026 prize cam038 prize cam039 prize cam040 prize cam045 prize cam051 prize cam053 prize cam060 prize cam063 prize cam067 prize cam070 prize cam072 prize cam074 prize cam081 prize cam088 prize cam089 prize cam090 prize cam095 prize cam098 prize cam099 prize cam100 prize cam101 prize cam105 prize cam107 prize cam110 prize cam115 prize cam117 prize cam119 prize cam122 prize cam123 prize cam125 prize cam128 prize cam130 prize cam131 prize cam132 prize cam133 prize cam134 prize cam136 prize cam138 prize cam139 prize cam147 prize cam151 prize cam152 prize cam162 prize cam166 prize cam168 prize cam175 prize cam178 prize cam179 prize cam180 prize cam182 prize cam183 prize cam185 prize cam189 prize cam191 prize cam192 prize cam197 prize cam200 prize cam204 prize cam205 prize cam206 prize cam208 prize cam212 prize cam214 prize cam217 prize cam222 prize cam227 prize cam231 prize cam236 prize cam237 prize cam239 prize cam241 prize cam243 prize cam244 prize cam246 prize cam250 prize cam251 prize cam252 prize cam257 prize cam258 prize cam259 prize cam260 prize cam262 prize cam265

Sorry, the comment form is closed at this time.