Google

தேசிய ரீதியில் நடைபெற்ற IT Master Mind quiz competition போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ஞானகீதன் முதலிடத்தை பெற்றார்…

Written on:June 30, 2014
Comments are closed

IMG_4374கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற IT Master Mind quiz competition -2014 இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பா.ஞானகீதன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இறுதிச் சுற்றுக்கு 6 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.இவ் இறுதிச்சுற்றில் அவர் மிகவும் சிறப்பாக செயற்பட்டு முதலாமிடத்தினை பெற்றுக் கொண்டார். இப் போட்டியில் நாடளாவிய ரீதியில் 1000 மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர் முதலாமிடம் பெற்றமையினால் இவருக்கு esoft metro campus நிறுவனத்தினால் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ரூபா 100,000 பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. அத்துடன் அந்நிறுவனத்தினால் எமது கல்லூரிக்கு ரூபா 250,000 பெறுமதியான கணினி உபகரணங்களும் வழங்கப்பட இருக்கின்றது. அத்துடன் IT Master Mind quiz competition program ITN தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_4374

Sorry, the comment form is closed at this time.