Google

யாழ் இந்துக் கல்லூரி எதிர் கொழும்பு ஆனந்தா கல்லூரி ”V.T.S.சிவகுருநாதன் கிண்ண” கிரிக்கட் போட்டி

Written on:April 19, 2014
Comments are closed

sdயாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணிக்கும் இடையிலான “வீ.ரீ.எஸ். சிவகுருநாதன்” கிண்ணத்திற்கான மூன்றாவது  வருடாந்த நட்புறவு கிரிக்கெட் போட்டி ஆனந்தா கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இனங்களிடையே நல்லிணக்கம், நட்புறவு, சகோதரத்துவம் நிலைக்கவேணடும் என்ற உயரிய நோக்குடன் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் உறவுப் பாலமாக இருந்த ஒருவரின் பெயரில் நட்புறவு கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இரண்டு பாட சாலைகளினதும் பழைய மாணவர் சங்கங்களும் இணங்கியதன் பலனாக இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.எனவே யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் இப்போட்டிக்கு வருகை தந்து உற்சாகப்படுத்துமாறு போட்டியின் ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

sd
இவ்வருடப் போட்டி யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினரின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது . அதுமட்டுமல்லாமல் கடந்த வருடத்தைப் போன்றே ஆனந்தாக் கல்லூரி அதிபர்  தமிழ் மொழியிலும், இந்துக் கல்லூரி அதிபர் வீ.கணேசராசா சிங்கள மொழியிலும் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்

முதல் நாள் ஆட்ட முடிவின் பின் விவாத போட்டி நடைபெற இருப்பதும் குறிப்பிட த்தக்கது. இப்போட்டி  கிரிக்கட் போட்டியுடன் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது, இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரிசளிப்பு வைபவம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து  விருந்தாளிகளின் ஒன்றுகூடலும் இரவுப் போசன விருந்தும் நடைபெறும். இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் கடந்த வருடம் நடைபெற்ற  வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் கிண்ண நட்புறவுக் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் எமது கல்லூரி வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை விட நட்புறவும் சகோதரத்துவமும் வெற்றிபெற்று அது நிலைத்திருக்கவேண்டும் என்பதே பலரதும் பிரார்த்தனை ஆகும்.

DSC_0867 copy copy (1)
                                                யாழ் இந்துக் கல்லூரி அணி
asssa                                                       ஆனந்தா கல்லூரி அணி

Sorry, the comment form is closed at this time.