Google

இந்துக்களின் போர் கோலாகலமாக ஆரம்பமாகியது -முதல் நாள்

Written on:March 21, 2014
Comments are closed

boh1இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

இந் நிகழ்விற்கு யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மருத்துவர் தேவநேசன், அவர்களும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் ராம்குமாரும் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்.G.A.சந்திரசிறீ அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

கொழும்பு இந்துக் கல்லூரி அணி திவாகரன் தலைமையிலும்,  யாழ். இந்துக் கல்லூரி அணி கல்கோகன் தலைமையிலும் களமிறங்கியுள்ளன.  2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற 4 ஆவது துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.   இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி  39.3 ஓவர்கள் நிறைவில் 200 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெற்றினையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய யாழ்.இந்துக் கல்லூரி அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்களை  இழந்து 192 ஓட்டங்கள் பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. கொழும்பு இந்துக் கல்லூரி அணி சார்பாக யசோதரன் 60 பந்துகளுக்கு முகம் கொடுத்து 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். யாழ்.இந்துக் கல்லூரி சார்பாக மதுசன் 31 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். Live Score

vvv
ccc
ggg
யாழ் இந்துக் கல்லூரி முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில்

சிவலக்ஸன் – 25 ஓட்டங்கள்
பானுகோபன் – 26 ஓட்டங்கள்
கல்கோகன் – 28 ஓட்டங்கள்
றுக்ஸ்மன் – 32 ஓட்டங்கள்
மதுசன் -31* ஓட்டங்கள்
கஜானாத் – 21* ஓட்டங்கள்

பந்து வீச்சில் இந்துக் கல்லூரி, கொழும்பு

கயேந்திரன் – 3 விக்கெட்டுக்கள்
யசோதரன் – 2 விக்கெட்டுக்கள்

1 (8) 1 (14) 1 (17) 1 (21) 1 (22) 1 (28) 1 (29) 1 (31) 1 (32) 1 (33) 1 (36) 1 (37) 1 (43) 1 (44) 1 (45) 1 (46) 1 (52) 1 (54) 1 (57) 1 (60) 1 (64) 1 (66) 2 (1) 2 (6) 2 (10) 2 (13) 2 (15) 2 (16) 2 (19) 2 (21) 2 (22) 2 (26) 2 (32) 2 (36) 2 (43) 2 (45) 2 (46) 2 (49) 2 (50) 2 (51) 2 (55) 2 (57) 2 (61) 2 (66) 2 (70) 2 (77) 2 (81) 2 (82) 2 (83) 2 (84) 2 (86) 2 (87) 2 (88) 2 (89) 2 (90) 2 (91) 2 (92) 2 (93) 2 (94) 2 (95) 2 (96) 2 (97) 2 (98) 2 (99) 2 (100)

Sorry, the comment form is closed at this time.