Google

யாழ் இந்துவில் நடைபெற்ற விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீடும்…

Written on:March 15, 2014
Comments are closed
science_0037யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி விஞ்ஞான மன்றத்தினரின் விஞ்ஞான தினமும் இந்து விஞ்ஞானி இதழ் வெளியீட்டு நிகழ்வும் 14.3.2014 வெள்ளிக் கிழமை கல்லூரி குமாரசுவாமி மண்டத்தில் செல்வன்.மி.துமிலன் தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கல்லூரி முன்னாள் ஆசிரியையும், பிரதி அதிபருமாகிய திருமதி சத்தியரூபி சுரேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் விஞ்ஞான தினமானது காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் தொடர்ந்தன.விஞ்ஞான மன்ற பெறுப்பாசிரியர் திரு.ந.மகேஷ்வரன் ஆசிரியர்கள் அவர்கள் தனது உரையில் கல்லூரி விஞ்ஞான மன்றத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும், விஞ்ஞான மன்றத்தினரின் முக்கியத்துவம் தொடர்பாகவும் தெரிவித்தார்.  ஆசிரியர் திரு.செ.கோகுலானந்தன் ஆசிரியரின் வெளியீட்டு உரையுடன் இந்து விஞ்ஞானி இதழ் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்களினால் வெளியிடப்பட 2010 உயர்தர மாணவர்கள் சார்பில் திரு.பானுஜன் அவர்கள் முதற்பிரதியினை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  நூலிற்கான ஆய்வுரையினை கல்லூரி முன்னார் ஆசிரியரும், விஞ்ஞான மன்றத்தின் நிறுவிய கால பொறுப்பாசிரியருமான திரு இரா.ஈஷ்வரதாசன் அவர்கள் வழங்கினார்.  அதனை தொடர்ந்து விஞ்ஞான மன்றத்தினரால் நாடாத்தப்பட்ட பரீட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழ்ங்கி கெளரவிக்கப்பட்டது. மாணவர்களின் விவாத நிகழ்வுடன், நன்றி உரையினை தொடர்ந்து கல்லூரி கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றன.science_0005 science_0007 science_0008 science_0009 science_0010 science_0011 science_0012 science_0013 science_0020 science_0022 science_0029 science_0030 science_0036 science_0037 science_0040 science_0045 science_0050 science_0051 science_0052 science_0053 science_0054 science_0055

Sorry, the comment form is closed at this time.