Google

E.Sabalingam வெற்றி கிண்ணத்துக்கான போட்டியில் போராடித் தோற்றது யாழ் இந்து.

Written on:March 6, 2012
Comments are closed

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான E.Sabalingam கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் போட்டி ஒன்று யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி அமைச்சின் செயலாளர் Mr.S.சத்தியசீலன் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இப் போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக E.S.P.Nagaratnam (E.S.P.N &Co), Mr.R.Jeyaraj (DSI super shoes & agent), Mr.S.Sivabaskaran (Saranka jewellery &money exchange)  போன்றோர் கலந்து கொண்டனர். அதன் பின் இன்றைய போட்டிக்கான நாணயச்சுழற்சி இடம்பெற்றது. இந் நாணயச் சுழற்சியானது யாழ் இந்துக் கல்லூரி அணித்தலைவருக்கு சாதகமாக அமைய அவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன் படி யாழ் இந்துக் கல்லூரி 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

இதன் அடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :
ஜஸ்மினன் -84
சஜீகன் -24
மதுசன் -19
கிருசோபன் -18

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பாக :
ஜனுதாஸ் -4
பார்த்தீபன் -3
ராகுலன் -2 விக்கெட்டுக்களை வீழ்தினர்.

இதன் பின் துடுப்பெடுத்தாடிய   கொக்குவில் இந்துக் கல்லூரி  அணி 40 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 229 என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

கொக்குவில் இந்துக் கல்லூரி  சார்பாக :
பங்குஜன் -103*
ராகுலன் -32*
திவாகர் -29

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக :
மதுசன் -2
சாரங்கன்- 1 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டக் காரருக்கான விருது பங்குயனிற்கு வழங்கப்பட்டது. அதே போன்று சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது ஜனுதாசிற்கு வழங்கப்பட்டது. பின் சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது சிலோஜனிற்கு வழங்கப்பட்டது. இப் போட்டியின் Man of the Match விருதும் பங்குயனுக்கு வழங்கப்பட்டது. பின் இப் போட்டியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு பிரதம விருந்தினரால் E.Sabalingam சுற்றுக் கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Sorry, the comment form is closed at this time.