Google

யாழ் இந்துக் கல்லூரி VS கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி -”இந்துக்களின் போர்”

Written on:March 6, 2014
Comments are closed

1956670_625036630884428_1021981845_oஇதுவரை காலமும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்த ”இந்துக்களின் போர்”  கிரிக்கட் போட்டியானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் இந்துக் கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ”இந்துக்களின் போர்” எனும் போட்டியானது யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்தன. பின்னர் இப் போட்டியினை நடாத்துவதற்கு சரியான சூழ்நிலைகள் இல்லாமையால் கடந்த காலங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனது. இருந்தும் மீண்டும் ஆரம்பமாகிய இப்போட்டியானது கடந்த வருடம் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான போட்டியானது யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 21 மற்றும் 22 திகதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

1956670_625036630884428_1021981845_o

Sorry, the comment form is closed at this time.