Google

யாழ் இந்துக் கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியில் முதலிடம் பெற்றது நாகலிங்கம் இல்லம்…

Written on:February 24, 2014
Comments are closed

sports_0071யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 21.02.2014 அன்று கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்பெற்றது. கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா தலைமயில் பிரதம விருந்தினராக மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் திரு க.சுசீந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

நண்பகல் 1.30 மணியளவில் ஞான வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, 2007 உயர்தர மாணவர்களின் நிதியுதவியினால் நிர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் கல்லூரி பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து கல்லூரியின் மாணவ முதல்வர்கள் கல்லூரிக் கொடியினை ஏந்தியவாறு அணி நடையின் தலைமை பெறுப்பினை பெற்று வர நாகலிங்கம், சபாபதி, பசுபதி, காசிப்பிள்ளை, செல்லத்துரை இல்லங்கள் தத்தமது வர்ண நிறக்கொடிகளுடன் அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டனர்,

எமது கல்லூரியின் பெருமை பொருந்திய நீலம் வெள்ளை கொடியானது 5 இல்லங்களினைச் சேர்ந்த இல்ல தலைவர்களினால் எடுத்துவரப்பட்டு  கொடிக் கீதம் இசைக்க கல்லூரி சிரேஷ்ட மாணவ முதல்வனால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இல்லக் கொடிகளும் ஏற்றி வைக்கப்பட்டன.  5 இல்லக் கொடிகளும் மோட்டார் வண்டி பவனியாக மைதானத்தினை சுற்றி வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது.

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு போட்டி விதிகளுக்கமைவாக கல்லூரி சிரேஸ்ட மாணவ முதல்வனின் வழிகாட்டலில் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.  ஒலிம்பிக் தீபமாது கல்லூரி மெய்வல்லுனர் சாதனையாளரினால் எடுத்து வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து  விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தரம் 6 மாணவர்களின் இடைவேளை நிகழ்வும், உடற் பயிற்சி அணியினரின் சாகச நிகழ்வுகளும் விழாவினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.

நாகலிங்கம் இல்லமானது 473 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. அதனை தொடர்ந்து சபாபதி இல்லம் 444 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பசுபதி இல்லம் 431 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும், செல்லத்துரை இல்லம் 336 புள்ளிகளைப் பெற்று 4 ஆம் இடத்தினையும், காசிப்பிள்ளை இல்லம் 315 புள்ளிகளைப் பெற்று 5ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

விளையாட்டு வீரர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் பிரதம விருந்தினரின் பாரியார் திருமதி.சுசீந்திரன் அவர்கள் வழங்கி கெளரவித்தார், அதனை தொடர்ந்து உதவி சிரேஷ்ட மாணவ முதல்வனின் நன்றி உரையுடன், கல்லூரி கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

sports_0001 sports_0002 sports_0003 sports_0004 sports_0005 sports_0006 sports_0007 sports_0008 sports_0009 sports_0010 sports_0011 sports_0012 sports_0013 sports_0014 sports_0015 sports_0016 sports_0017 sports_0018 sports_0019 sports_0020 sports_0021 sports_0022 sports_0023 sports_0024 sports_0025 sports_0026 sports_0027 sports_0028 sports_0029 sports_0030 sports_0031 sports_0032 sports_0033 sports_0034 sports_0035 sports_0036 sports_0037 sports_0038 sports_0039 sports_0040 sports_0041 sports_0042 sports_0043 sports_0044 sports_0045 sports_0046 sports_0047 sports_0048 sports_0049 sports_0050 sports_0051 sports_0052 sports_0053 sports_0054 sports_0055 sports_0056 sports_0057 sports_0058 sports_0059 sports_0060 sports_0061 sports_0062 sports_0063 sports_0064 sports_0065 sports_0066 sports_0067 sports_0068 sports_0069 sports_0070 sports_0071

Sorry, the comment form is closed at this time.