Google

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற யாழ் இந்துக் கல்லூரி தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா – 2014

Written on:January 17, 2014
Comments are closed

kaal kool vilal_006717/01/2014 அன்று யாழ் இந்துக் கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பல கல்வியியளாலர்களும், பழைய மாணவர்களும், எமது கல்லூரி ஆசிரியர்களும்,  தரம் 6 மாணவர்கள் தமது பெற்றோர் சகிதமும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத் தலைவர் Dr.E.தேவநேசன் அவர்கள் கலந்து கொண்டு கொண்டார். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன், மக்கள் வங்கி யாழ் பல்கலைக்கழக கிளையின் முகாமையாளர், யாழ் இந்துக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் போன்றோரும் கலந்து கொண்டனர். இவர்களுடன்  நல்லை ஆதின குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சாரிய சுவாமிகளும், வடமாகாண சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத சைதன்ய சுவாமிகளும் இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.

இந் நிகழ்வின் முதன் நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் பின்னர் பிரதம விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவித்து பான்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக தரம் 6 மாணவர்களும் கே.கே.எஸ் வீதி வழியாக எமது கல்லூரியின் முன் வாயிலூடாக பிரார்த்தனை மண்டபத்தினுள் வரவேற்கப்பட்டனர். அதன் பின் வருகை தந்திருந்த சுவாமிஜிகளினால் ஆசியுரையும், பின்னர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களது உரையும் பின்னர் அதிபர் அவர்களது உரையும் அதனைத் தொடர்ந்து பலரது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. இறுதியில் பிரதம விருந்தினரது உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

இதன் பிற்பாடு யாழ் மக்கள் வங்கி கிளையினரால் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்கள் அனைவரும் தமது புதிய வகுப்பறைகளுக்கு சென்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அத்துடன் அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.

kaal kool vilal_0003 kaal kool vilal_0005 kaal kool vilal_0009 kaal kool vilal_0013 kaal kool vilal_0014 kaal kool vilal_0015 kaal kool vilal_0019 kaal kool vilal_0025 kaal kool vilal_0026 kaal kool vilal_0027 kaal kool vilal_0028 kaal kool vilal_0029 kaal kool vilal_0031 kaal kool vilal_0033 kaal kool vilal_0035 kaal kool vilal_0036 kaal kool vilal_0039 kaal kool vilal_0042 kaal kool vilal_0044 kaal kool vilal_0046 kaal kool vilal_0047 kaal kool vilal_0050 kaal kool vilal_0051 kaal kool vilal_0054 kaal kool vilal_0055 kaal kool vilal_0058 kaal kool vilal_0060 kaal kool vilal_0062 kaal kool vilal_0064 kaal kool vilal_0066 kaal kool vilal_0067 kaal kool vilal_0068 kaal kool vilal_0071 kaal kool vilal_0072 kaal kool vilal_0074 kaal kool vilal_0077 kaal kool vilal_0079 kaal kool vilal_0080 kaal kool vilal_0083 kaal kool vilal_0084 kaal kool vilal_0086 kaal kool vilal_0089 kaal kool vilal_0092 kaal kool vilal_0094 kaal kool vilal_0095 kaal kool vilal_0100 kaal kool vilal_0101 kaal kool vilal_0104 kaal kool vilal_0109 kaal kool vilal_0111 kaal kool vilal_0131 kaal kool vilal_0134 kaal kool vilal_0140 kaal kool vilal_0141 kaal kool vilal_0144 kaal kool vilal_0145

Sorry, the comment form is closed at this time.