யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சிட்னி பழைய மாணவர் சங்கத்தினரின் ஆதரவில் கல்லூரி ஒளிப்படக்கலைக் கழகத்தினரின் ஏற்பாட்டில் நிழல்களின் நிஜங்கள் புகைப்படக் கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. கல்லூரி மாணவர்களின் புகைப்படத் துறையிலான ஆர்வத்தினை தூண்டும் முகமாகவும் இலைமறை காய்களாக உள்ள மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இக்கண்காட்சியானது முதன் முறையாக ஒழுங்கு செய்யப்பட்டது.
கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதொரு விடயாமாகும். பாடசாலை மட்டத்தில் புகைப்படக் கண்காட்சி ஒழுங்கமைத்த பெருமை யாழ் இந்துவையே சாரும். இக்கண்காட்சியானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெற்றது.. இவ்வாறான இணை பாடவிதான செயற்பாடுகள் மூலம் மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படுகின்றது.