Google

வட மாகாண 8 பாடசாலைகளுக்கு யாழ் இந்துக் கல்லூரி சிட்னி பழைய மாணவர் சங்கத்தினால் புத்தகங்கள் கையளிப்பு

Written on:December 7, 2013
Comments are closed

Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_10யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆஸ்திரேலியா, சிட்னி பழைய மாண்வர் சங்கத்தின் கல்வி எங்கள் மூலதனம் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாண பாடசாலைகளுக்கு நூலகங்களுக்கான நூல்களினை கையளிக்கும் வைபவம் இன்று கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக யாழ் இந்துக் கல்லூரி, யாழ் இந்து ஆரம்ப பாடசலை, கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பாடசாலை, திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி, கொக்குவில் ராம கிருஷ்ணா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கான நூல்கள் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழைய மாணவர் திரு.ஈ.சரவணபவான் அவர்களும், சிறப்பு விருந்தினராக  வடமாகாண சபையின் விவசாய அமைச்சர்  பழைய மாணவர் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செயற்றிட்டம் ஆஸ்திரேலியா வாழ் இந்துவின் மைந்தர்களின் அயராத உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் வெற்றியளித்திருப்பதாகவும், சிட்னி பழைய மாணவர் சங்கத்தினர் எமது கல்லூரி  மட்டும்மல்லாது வடமாகாண பாடசாலைகளின் கல்வி நிலையினையினை உயர்த்தும் நோக்குடன் செயற்படுகின்றமை பெருமையான விடயம் என கல்லூரி அதிபர் வீ.கணேசராஜா அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கெளரவ அமைச்சர் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் இது போன்ற ஆக்கத்திறன் மிக்க
செயற்பாடுகள் மூலமே இழந்த எம் இனத்தின் சுவடுகளை மீளப் பெற்று நாம் கல்வியில் முன்னேற்றமடைய முடியும் என கருத்துதெரிவித்தார்.
ஒரு இனத்தின் அடையாளமாக கலாச்சார விழுமியங்கள் இருந்தாலும் அதனை உலகறிய செய்வது அந்த இனத்தின் திறமைகளே. குறிப்பாக கல்வியியல் திறமைகளே.அதனை வெளிப்படுத்துவது உயர்தரக்கல்வியும், பரீட்சைப்பெறுபேறுகளுமே.எனவே இவ்வாறான நூல்கள் கையளிப்பதன் மூலம் மாணவர்கள் பயன் பெறுவர் என்பதில் எந்த ஐயப்பாடும் கூறிவிடமுடியாது என்று தனது பிரதமவிருந்தினர் உரையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஈ.சரவணபவான் அவர்கள் தெரிவித்தார். மேலும் சிட்னி பழைய மாணவர் சங்கத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியவை என்றும்  புலம்பெயர்ந்து வசித்து வந்தாலும் அவர்களின் சிந்தனை வடமாகாணக் கல்வியின் முன்னேற்றத்திலும் இந்து அன்னை பற்றியதாகவும் இருப்பதாகவும் தெரிவித்தார். சிட்னி பழைய மாணவர் சங்க செயலாளர் குணரட்ணம் பார்த்தீபன் அவர்களின் இடையறா முயற்சிக்கு பலன் கிடைதிருப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கான நூல்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடந்து நூல்களினைப் பெற்றுக் கொண்ட பாடசாலைகள் சார்பில் கருத்து தெரிவித்த பரமேஸ்வராக் கல்லூரி அதிபர் திரு.விஜயசுந்தரம் அவர்கள் பழைய மாணவர்களின் பாடசாலை கடந்த செயற்பாடுகளை வரவேற்றதுடன், யாழ் இந்துவின் பழைய மாணவர் சங்கங்களின் உதவிகள் மென்மேலும் யாழ் பாடசாலைகளுக்கு கிடைக்க பெற செய்யபடவேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார். த.சுஜீவன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.இந்நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , அதிபர்கள் என 350 மேற்பட்ட கல்வி சமூகத்தினர்  கலந்துகொண்டனர்.

Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_01 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_02 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_03 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_05 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_06 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_07 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_08 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_09 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_10 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_14 Jaffna_Hindu_OBA_Sydney_Book_Donations_Jaffna_District_2013_15

Sorry, the comment form is closed at this time.