இன்றைய தினம் (04.12.2013) யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பறைத்தொகுதி ஒன்று மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத் தலைவர் Dr.E.தேவநேசன் அவர்கள் கலந்து கொண்டு பெயர் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார். அத்துடன் இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் பழைய மாணவர் சங்கத் தலைவரும், வாழ்நாள் பேராசிரியருமான திரு.பொ.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் இந் நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
இப் புதிய கழிப்பறை தொகுதியினை அமைப்பதற்கான நிதியினை U.K Old Boys Association உம் பாடசாலை அபிவிருத்தி குழுவும் இணைந்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.