நவம்பர் மாத இறுதியில் Philippines இல் நடைபெற்ற 10 ஆவது International Mathematics and Science Olympiad (I M S O) போட்டியில் யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து பங்குபற்றிய மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் அவர்கள் அப் போட்டியில் பங்குபற்றி வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக் கொண்டார். சர்வதேச ரீதியாக 17 நாடுகள் பங்குபற்றிய இப் போட்டியில் இலங்கையில் இருந்து 9 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இந் நிகழ்வில் இலங்கையில் இருந்து பங்குபற்றும் குழுவில் யாழ் இந்துக் கல்லூரியையும், தமிழரையும் பிரதிநிதி்த்துவப்படுத்தும் மாணவனாக இவர் ஒருவரே இருந்துள்ளார்.
இப் போட்டியில் பங்குபற்றி நாடு திரும்பிய மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் அவர்களுக்கு இன்றைய தினம் எமது கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அவர்கள் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதன் போது வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்தியதுடன் அவருக்கு துணையாக இருந்த ஆசிரியர் திரு.S.அகிலன் அவர்களையும் அதிபர் அவர்கள் இந் நிகழ்வின் போது வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.