Google

இந்துக்களின் போர் ஆரம்பமாகியது (படங்கள் இணைப்பு)

Written on:March 2, 2012
Comments are closed

இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டி இன்று காலை 9.00 மணியளவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவனும் Seagull property developers நிறுவனத்தின் உரிமையாளருமான Eng.S.Kirubananthan கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். அதே போன்று இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக Mr.E.S.P.Nagaratnam அவர்களும் கலந்து கொண்டார். முதலில் ஆலய வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய நிகழ்வுகளை தொடர்ந்து இரு அணி வீரர்களும் பாண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின் தேசியக் கொடி, பாடசாலை கொடிகள் ஏற்றியதை தொடர்ந்து மங்கள விளக்கும் ஏற்றப்பட்டது. அதன் பின் கிரிக்கட் போட்டி ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர் களமிறங்கினர்

கொக்குவில் இந்துக்கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்ஸில் 68.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 275 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர். கொக்குவில் இந்துக் கல்லூரி சார்பில் அணித்தலைவர் பங்குயன் 126 பந்துகளில் 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 98 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இவர் கடந்த வருட போட்டியில் சதம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குயனுடன் இணைந்து ஜனுதாஸ் 5 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 61 ஓட்டங்களையும் ராகுலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

  • கீர்த்திகன் 05
  • சத்தியன் 05
  • பங்குயன் 98
  • திவாகர் 09
  • ராகுலன் 37
  • ஆதித்தன் 05
  • ஜனுதாஸ் 61
  • சிலோஜன் 06
  • நிசாந்தன் 02
  • பார்த்தீபன் 06
  • பவிதரன் ஆட்டமிழக்கால் 03 ஓட்டங்கள்
  • உதிரி – 34

மொத்த ஓட்டங்கள் 275-10 (68.4 ஓவர்கள்)

பந்து வீச்சில் யாழ் இந்துக்கல்லூரி சார்பில் :

  • வாமனன் 16 ஓவர்கள் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
  • ருக்ஸ்மன் 12 ஓவர்கள் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகள்
  • நிலாஜனன் 05 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகள்
  • கிருசோபன் 06 ஓவர்கள் 13 ஓட்டங்களுக்கு 1 விக்கட்
  • ஜஸ்மினன் 8.4 ஓவர்கள் 18 ஓட்டங்களுக்கு 1 விக்கட்

தேநீர் இடைவேளையை தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யாழ் இந்துக்கல்லூரி அணியினர் இன்றைய ஆட்ட நேர முடிவில் 28 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் மதுசன் 64 ஓட்டங்ளையும்
ஜஸ்மினன் ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்கள் தவிர

  • கல்கோகன் 06
  • சஜீகன் 00
  • ருக்ஸ்மன் 00
  • சிந்துஜன் ஆட்டமிழக்காமல் 09 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கொக்குவில் இந்துக்கல்லூரி சார்பில் ராகுலன் 02 விக்கட்டுகளையும்
பங்குயன் 1 விக்கட்டையும் வீழ்த்தினர். போட்டி நாளை காலை 09 மணிக்கு ஆரம்பித்து தொடரும்..

Sorry, the comment form is closed at this time.