Google

யாழ் இந்து 13 வயதுப் பிரிவு கிரிக்கட் அணி முன்னிலையில்……

Written on:November 11, 2013
Comments are closed

yyyyyஅண்மையில் யாழ் இந்துவின் 13 வயதுப் பிரிவு கிரிக்கட் A அணியானது 6 போட்டிகளில் பங்குபற்றி தனது முதல் சுற்றை நிறைவு செய்து கொண்டது. அதன் அடிப்படையில் யாழ் இந்து அணியானது சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, யுனியன் கல்லூரி அணி, மகாஜனா கல்லூரி அணி, யாழ்ப்பாணக் கல்லூரி அணி, நெல்லியடி மத்திய கல்லூரி அணி மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுடன்  விளையாடியது.
இதில் யாழ் இந்து அணியானது மகாஜனா கல்லூரி அணி, யாழ்ப்பாணக் கல்லூரி அணி,ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுடன்  விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றுக் கொண்டது. மற்றும்  யுனியன் கல்லூரி அணி, நெல்லியடி மத்திய கல்லூரி அணிகளுடன் விளையாடிய போட்டிகளில் முதல் இனிங்ஸில் யாழ் இந்து அணியானது முன்னிலை பெற்றுக் கொண்டது.  சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியுடனான போட்டி வெற்றி தோல்வி அற்ற நிலையில் சமனிலையில் முடிவடைந்தது.

வெற்றி பெற்ற போட்டிகளின் விபரம் :

1) யாழ் இந்துக் கல்லூரி VS மகாஜனா கல்லூரி

மகாஜனா கல்லூரி   1st innings – சகல இலக்குகளையும் இழந்து 67 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூி 1st innings- சகல இலக்குகளையும் இழந்து 129 ஓட்டங்கள்

பின்னர் 2nd innings இற்காக துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பின்னர் 98 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட யாழ் இந்து அணி 7 இலக்குகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து இப் போட்டியில் வெற்றி பெற்றது.

2) யாழ் இந்துக் கல்லூரி VS யாழ்ப்பாண கல்லூரி

யாழ்ப்பாண கல்லூரி   1st innings – சகல இலக்குகளையும் இழந்து 36 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூி 1st innings- 9 இலக்குகளை இழந்து 122 ஓட்டங்கள்

பின்னர் 2nd innings இற்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பின்னர் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட யாழ் இந்து அணி இலக்குகள் எதனையும் இழக்காமல் 8 ஓட்டங்களை பெற்று இப் போட்டியில் வெற்றி பெற்றது.

3) யாழ் இந்துக் கல்லூரி VS ஸ்கந்தவதோதயா கல்லூரி

யாழ் இந்துக் கல்லூரி   1st innings – 7 இலக்குகளை இழந்து 163 ஓட்டங்கள்
ஸ்கந்தவதோதயா கல்லூரி 1st innings- சகல இலக்குகளையும் இழந்து 53 ஓட்டங்கள்

பின்னர் 110 ஓட்டங்களினால் பின்னிலையில் இருந்த ஸ்கந்தவதோதயா கல்லூரி 2nd innings இற்காக துடுப்பெடுத்தாடியது. இதன் போது அது சகல இலக்குகளையும் இழந்து 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் இப் போட்டியில் யாழ் இந்து அணி 1 இலக்குகள் எதனையும் இழக்காமல் 8 ஓட்டங்களை பெற்று இப் போட்டியில் வெற்றி பெற்றது.

4) யாழ் இந்துக் கல்லூரி VS யுனியன் கல்லூரி

யுனியன் கல்லூரி  1st innings – சகல இலக்குகளையும் இழந்து 70 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூி 1st innings- 8 இலக்குகளை இழந்து 119 ஓட்டங்கள்

பின்னர் 2nd innings இற்காக துடுப்பெடுத்தாடிய யுனியன் கல்லூரி சகல இலக்குகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. பின்னர் 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட யாழ் இந்து அணி போதியளவு நேரம் போதாமையால் 1 இலக்கை மாத்திரம் இழந்து 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் இப் போட்டியில் யாழ் இந்து முன்னிலை பெற்றிருந்தாலும் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்திருந்தது.

5) யாழ் இந்துக் கல்லூரி VS நெல்லியடி மத்திய கல்லூரி

நெல்லியடி மத்திய கல்லூரி 1st innings – சகல இலக்குகளையும் இழந்து 44 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூி 1st innings- சகல இலக்குகளையும் இழந்து 71 ஓட்டங்கள்

பின்னர் 2nd innings இற்காக துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய கல்லூரி 2 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டியானது வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.இப் போட்டியின் முதல் இனிங்ஸில் யாழ் இந்து முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6) யாழ் இந்துக் கல்லூரி VS சென்.பற்றிக்ஸ் கல்லூரி

சென்.பற்றிக்ஸ் கல்லூரி 1st innings – 8 இலக்குகளை இழந்து 205 ஓட்டங்கள்
யாழ் இந்துக் கல்லூி 1st innings- 7 இலக்குகளை இழந்து 111 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டிக்கான நேரம் போதாமையினால் ஆட்டம் வெற்றி தோல்வி இன்றியே முடிவடைந்திருந்தது.

Sorry, the comment form is closed at this time.