Google

யாழ் மத்திய கல்லூரியின் விபுலானந்தா ஞாபகார்த்தப் கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றது யாழ் இந்து…

Written on:October 31, 2013
Comments are closed

hhgயாழ் மத்திய கல்லூரி மாணவ முதல்வர் சபையினால் நடாத்தப்படுகின்ற விபுலானந்தா ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 19 வயதுப்பிரிவு ஆண்கள் அணிகளுக்கான போட்டியில் யாழ்.இந்துக் கல்லூரிக்கும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் நேற்று 30/10/2013(புதன்கிழமை) மாலை 8.00 மணிக்கு மின்ணொளியில் யாழ்.மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் நடைபெற்றது. இதில் 68:48 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்.இந்து 20 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது தடவை சம்பியன் ஆகியது.இதில் யாழ்.இந்துக் கல்லூரி வீரன் கௌரிசங்கர் ஆட்டநாயகன் வி௫தை தட்டி சென்றார்.

hhg

Sorry, the comment form is closed at this time.