Google

யாழ் இந்துக் கல்லூரியில் சிறப்பான முறையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா – 2013

Written on:October 12, 2013
Comments are closed

SL386332யாழ் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 11/10/2013 அன்று கல்லூரி அதிபர் வீ. கணேசராசா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும், வட மாகாண கல்வியமைச்சின் செயலாளருமாகிய திரு.சிவலிங்கம் சத்தியசீலன் அவர்களும் அவரது பாரியார் திருமதி. இராஜராஜேஸ்வரி சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வினை தொடர்ந்து ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் தேநீர் விருந்துபசாரம் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினரும் ,அவரது பாரியாரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். இந் நிகழ்வில் ஆசிரியர் கழகத்தலைவர் திரு.சிறீக்குமார் அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினருக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தார்.  இதன் பின் விருந்தினர்கள் பான்ட் வாத்தியத்தோடு குமாரசுவாமி மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

மேடை நிகழ்வின் முதல் நிகழ்வாக தேவாரமும் அதனை தொடர்ந்து வரவேற்பு நடனமும் இடம் பெற்றது. பின் அதிபர் அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்குரிய அதிபர் அறிக்கையை வாசித்தார்.  அதனைத் தொடர்ந்து மாணவர்களது ஆங்கில, தமிழ் மொழி மூலமான பேச்சுக்கள் நடைபெற்றன. பின் அடுத்த நிகழ்வாக பிரதம விருந்தினருடைய உரை நடைபெற்றது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அதனடிப்படையில் வகுப்புத் தேர்ச்சி ,2012ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் தேசிய மட்ட ரீதியிலும், சர்வதேசமட்ட ரீதியிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களும், விளையாட்டு வீரர்களுக்கான வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ,அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

SL386207 SL386208 SL386211 SL386216 SL386217 SL386221 SL386222 SL386224 SL386235 SL386237 SL386239 SL386241 SL386247 SL386255 SL386258 SL386259 SL386264 SL386266 SL386269 SL386271 SL386274 SL386275 SL386281 SL386283 SL386287 SL386291 SL386301 SL386303 SL386304 SL386306 SL386309 SL386311 SL386313 SL386314 SL386321 SL386326 SL386330 SL386332 SL386339 SL386340 SL386345 SL386346 SL386349 SL386350 SL386351 SL386354 SL386355 SL386358 SL386361 SL386369 SL386379 SL386380 SL386384 SL386387 SL386388 SL386390 SL386393 SL386396 SL386407 SL386410 SL386415 SL386416 SL386417 SL386418 SL386420 SL386422 SL386423 SL386424 SL386425 SL386426 SL386427 SL386428 SL386429 SL386430 SL386431 SL386432 SL386433 SL386434 SL386435 SL386436 SL386437 SL386438 SL386439 SL386440 SL386441 SL386442 SL386443 SL386444 SL386445 SL386446 SL386447 SL386448 SL386449 SL386450 SL386452 SL386453 SL386454 SL386455 SL386456 SL386457 SL386458 SL386459 SL386460 SL386461 SL386464

Sorry, the comment form is closed at this time.