Google

யாழ் இந்து மாணவர்களால் வெளியிடப்பட்ட பாடலுக்கு சிறந்த பாடல் வரிகளிற்காக அரச விருது கிடைத்துள்ளது.

Written on:September 17, 2013
Comments are closed

993731_554953531249519_1756041379_nயாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பில் வெளிவந்த “உறவு தேடும்” பாடலுக்கு அரச இசை விருது வழங்கல் விழாவில் சிறந்த பாடல் வரிகள் ஆக்கத்திற்கான அரச தேசிய விருதினை எமது பாடசாலை மாணவர் முதல்வர் சபையின் செயலாளரும் இளசுகள் பாடலாக்க குழுவின் முன்னாள் தலைவருமான தனபாலசிங்கம் மதீசன் பெற்றிருக்கிறார். கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்த்த மதீசனுக்கு எங்கள் கல்லூரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.அத்துடன் இப் பாடல் வெளிவர உதவிய அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும்  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கல்லூரி சமூகம் தெரிவித்துக்கொள்கிறது. இவ் விருதிற்கு இலங்கை முழுவதுமாக 26 பாடல்கள் போட்டியிட்டன. இறுதியில் எமது கல்லூரியினால் உருவாக்கப்பட்ட பாடலுக்கே இவ் விருது கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

இசையமைப்பு, பாடல் வரிகள் – தனபாலசிங்கம் மதீசன்
பாடியோர்- த.விஸ்ணுகரன், ஜெகனி பாலமுரளிகிருஷ்ணா, ம.கோகுலன்
கவி வரிகள்- ஆசிரியர் ல.நிசாந்தன்
கவியுரை- ச. மயூரேசன்
ஆலோசனை-கு.மகிழ்ச்சிகரன்.

228845_490936864251633_739430053_n

Sorry, the comment form is closed at this time.