Google

Matrix Home நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்.இந்து அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரியை வென்றது

Written on:August 6, 2013
Comments are closed

4நேற்று Matrix Home  நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் 19 வயதுப்பிரிவு ஆண்கள் அணிகளுக்கான இறுதிப்போட்டி மாலை 6.30 மணியளவில் யாழ்.இந்து கூடைப்பந்தாட்டத் திடலில் மின்ணொளியில் ஆரம்பமானது. இறுதிப்போட்டியானது யாழ்.இந்துக் கல்லூரிக்கும் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் நடைபெற்றது.இதில் 99:35 என்ற புள்ளிகள் அடிப்படையில் யாழ்.இந்து அணி 64 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை வென்றது.

இதில் ஆட்ட நாயகன் வி௫தை யாழ்.இந்துக் கல்லூரி அணிதலைவர் அனுசன் தட்டிச்சென்றார்.தொடர் ஆட்ட நாயகன் வி௫தை சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணிதலைவர் கென்றிக்ஸ்சன் தட்டிச்சென்றார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு மேட்ரிக்ஸ் ஹோம்ஸ் நிர்வாகி திரு.நடராஜா ராஜ்குமார் (யாழ் இந்து பழைய மாணவன்) வருகைதந்திருந்தார் . மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு.சன் தயாளன் , கப்டன்.சோமசுந்தரம்,திரு.அருள்குமரன் மற்றும் திரு.வசந்தன் அவர்களும் பங்குபற்றினர்.

இந்நிகழ்வினை யாழ் இந்து கல்லூரி கூடைபந்து சங்கமும் கொழும்பு பழையமாணவர் சங்கமும் இணைந்து மேட்ரிக்ஸ் ஹோம்ஸ்நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்தனர்.

1 2 3 4 993661_1384663105092836_724248373_n

Sorry, the comment form is closed at this time.