Google

அனைத்து வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் தொடர்ந்தும் பிரகாசித்து வரும் யாழ் இந்து…

Written on:July 17, 2013
Comments are closed

DSC01675அண்மையில் மானிப்பாயில் உள்ள  Angel International School இனால் நடாத்தப்பட்ட 17, 15 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி அணி இரண்டு பிரிவுகளிலும் வெற்றியீட்டி இருக்கின்றது. 17 வயதுப் பிரிவிற்குரிய இறுதிப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து விளையாடிய யாழ் இந்து அணி 34:22 எனும் புள்ளிகளடிப்படையில் யாழ் மத்திய கல்லூரியை வீழ்த்தி வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது. அதே போன்று நடைபெற்ற 15 வயதுப் பிரிவுப் போட்டியில் யாழ் இந்து அணியை எதிர்த்து மானிப்பாய் Angel International School அணி விளையாடியது. எனினும் இப் போட்டியில் யாழ் இந்து அணியினால் இரண்டாம் இடத்தினையே பெற்றுக் கொள்ள முடிந்தது. இப் போட்டியில் மானிப்பாய் Angel International School 42 : 23 எனும் புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது. இப் போட்டிகளில் யாழ் மாவட்டத்தில் இருந்து பல பாடசாலைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கேடயங்களும் சான்றிதழ்களும் அண்மையில் எமது கல்லூரி அதிபரால் குமாரசுவாமி மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அதே போன்று அண்மையில் நடந்து முடிந்த வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயதுப் பிரிவு கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ் பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து விளையாடிய யாழ் இந்து அணி இப் போட்டியில் வெற்றி பெற்று வடமாகாண சம்பியன் ஆனமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவ் வருடம் நடைபெற்று வருகின்ற கூடைப்பந்தாட்ட போட்டிகளில் யாழ் இந்து அணி  தொடர்ந்தும் பிரகாசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.