Google

யாழ் இந்துவில் ”தொழில்நுட்ப துறை” பாடத்திற்கான கட்டடம் ஒன்றிற்கு அத்திபாரம் இடப்பட்டது.

Written on:July 3, 2013
Comments are closed

IMG_2525தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப துறை பாடத்திற்கான முன்னேற்பாடாக இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரியில் புதிதாக ஒரு கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது. இந் நிகழ்வாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி  அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட மேலும் பல கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் ஆய்வு கூடத்திற்கு  “தொழினுட்ப ஆய்வு கூடம்” என பெயர் சூட்டப்படவிருக்கின்றது. இவ் ஆய்வு கூடமானது 1000 பாடசாலைத்திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளான யாழ் இந்துக் கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் முதற் கட்டமாக வர இருக்கின்றது.

இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின் விருந்தினர்கள் அனைவரும் பான்ட் வாத்தியத்துடன் குமாரசுவாமி மண்டபத்தின் கீழ் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின் பிரதம வருந்தினர் உட்பட அனைவரும் கட்டடத்துக்கான அத்திபாரக்கற்களை நட்டு வைத்தனர். அதன் பின் பிரதம விருந்தினர் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். அதன் பின் குமாரசுவாமி மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதில் அதிபர் உட்பட பிரதம விருந்தினர் அனைவரும் இவ் தொழினுட்ப பாடம் தொடர்பான விளக்கத்தினை மாணவர்களுக்கும் அங்கு வருகை தந்திருந்த பெற்றோர்களுக்கும் அளித்தனர். அதனை தொடர்ந்து எமது கல்லூரி ஆசிரியர் இவ் தொழினுட்ப பாடம் தொடர்பான நிகழ்த்துகை ஒன்றினையும் நடாத்தினர். பின் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றது.

IMG_2503 IMG_2509 IMG_2513 IMG_2515 IMG_2517 IMG_2522 IMG_2525 IMG_2541 IMG_2538 IMG_2536 IMG_2530 IMG_2527 IMG_2543 IMG_2555 IMG_2556 IMG_2546 IMG_2548 IMG_2557 IMG_2562 IMG_2549 IMG_2551 IMG_2566 IMG_2567 IMG_2577 IMG_2568 IMG_2580 IMG_2585 IMG_2569 IMG_2581 IMG_2570 IMG_2572 IMG_2588 IMG_2589 IMG_2601 IMG_2604 IMG_2609 IMG_2610

Sorry, the comment form is closed at this time.