Google

எமது மாணவர்களால் வெளியிடப்பட்ட ”துணிவோடு விளையாடு….” என்னும் கரு இசைப்பாடல்

Written on:February 23, 2012
Comments are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவைப்பிரிவின் கீழ் இயங்கும் இளசுகள் இசை உருவாக்க அணி, தமிழ் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் என “துணிவோடு விளையாடு….” என்னும் கரு இசைப்பாடலை உருவாக்கி இன்றைய தினம் கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் வெளியிட்டது. இந் நிகழ்வில் இப் பாடலை பாடியவரும், இசையமைத்தவருமான மதீசன் இவ் இறுவட்டை வெளியிட்டு வைக்க எமது கல்லூரி அதிபர் திரு.வீ.கணேசராசா அதை பெற்றுக்கொண்டார். அத்துடன் இந் நிகழ்வில் எமது கல்லூரியின் வழிகாட்டல் ஆலோசனை சேவைப்பிரிவின் பொறுப்பாசிரியர் திரு. நா.கு.மகிழ்ச்சிகரன் இவ் இறுவட்டு தொடர்பாக சிறிய உரையொன்றையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

பாடல் வரிகள் :

துணிவோடு நீ விளையாடு
தடைபோட உனக்காரு
களமிருக்கு நல்ல வளமிருக்கு
புயலாக நீ உருமாறு

வெற்றி என்ற சொல் உனக்கு சொந்தம் இல்லையடா
உன்னால் முடியும் என்றால் கிடைக்கும் நிச்சயம் வெற்றியடா
தோல்வி என்ற சொல்லை தூரம் தூக்கிப் போடடா
முயற்சி செய்து தோற்றுப் போனால் அதுவும் வெற்றியடா

தடை போட உன்னை எடை போட
அட யாரால் முடியுமடா
அது முடிந்தாலும் நீ தடை தாண்டு
தமிழ் அன்னையின் மைந்தனடா

Lyrics – சி.திவியன்,ஜெ.ஜனுசன்,ந.வேனுதனுஜன்
Singers – ச.மயூரேசன், த.மதீசன்
Music – த.மதீசன்
Production – இந்துவின் இளசுகள்
Recording – Sapthami Pro-music & recording
VFX – Evergreenbuzz
Video & Editing – Evergreenbuzz



 

Sorry, the comment form is closed at this time.