Google

இந்துக் கல்லூரியில் சிவராத்திரி தொடர்பான நிகழ்வுகள்

Written on:February 20, 2012
Comments are closed

யாழ் இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு முதல் நிகழ்வாக காலை 8.30 மணியளவில் சிவஞான வைரவர் ஆலயத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாணவர்கள் சிவஞான வைரவர் ஆசியுடன் தீட்சையை பெற்றுக் கொண்டனர். அத்துடன் இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்விலே பங்குகொள்வதற்காக எமது கல்லூரியில் இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் திருக்கேதீஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளார்கள். அத்துடன் இன்றைய தினம் கேதீஸ்வரத்தில் திறந்து வைக்கப்பட இருக்கும் சிவத்தமிழ் மானுடவிடியற் கழகம் எனும் நூலகத்துக்கு எமது கல்லூரியால் புத்தகங்களும் கையளிக்கப்பட இருக்கின்றன.

 

 

Sorry, the comment form is closed at this time.