Google

மொறட்டுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றது யாழ் இந்து…

Written on:May 13, 2013
Comments are closed

IMG_2160மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய ”தமிழருவி சொற்கணை 2013” எனும் பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாத போட்டிகள் நேற்றைய தினம் (12.03.2013) இறுதிப் போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இவ் விவாதப் போட்டிக்கு அகில இலங்கை ரீதியாக 127 பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டிகளில் யாழ் இந்து மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு சென்றனர். நேற்றைய தினம் கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் இந்து அணி திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரியை சந்தித்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் யாழ் இந்து கோணேஸ்வரா கல்லூரியை தோற்கடித்து அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது.

இவ் அணியின் அங்கத்தவர்கள்:

பொறுப்பாசிரியர் : திரு.வா.சிவராஜா
பயிற்றுவிப்பாளரும்,ஆலோசகரும் :ஆ.நவநீதகிருஸ்ணன்

மாணவர்கள் :
1. ஜீ.சஜீவன்
2. ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ
3. ப.பிரதீஸ்
4.ச.மயுரேசன்
5.எஸ்.தர்சனன்

IMG_2160

946033_10200810695537332_1394659624_n

 

 

Sorry, the comment form is closed at this time.