Google

சமனிலையில் முடிவடைந்தது இந்துக்களின் மாபெரும் போர்……

Written on:May 4, 2013
Comments are closed

4நேற்றைய தினம் ஆரம்பமாகிய ”இந்துக்களின் போர்” துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினமும், இன்றைய தினமும் கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய தினம் முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக நேற்றைய தினம் ஆரம்ப வைபவம் மட்டுமே நடைபெற்றது. போட்டியின் இரண்டாம் நாளாகிய இன்றைய தினம் முதல் நிகழ்வாக நாணயச் சுழற்சி இடம்பெற்றது. நாணயச் சுழற்ச்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அணித்தலைவர் வாமணன் முதலில் களத்தடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்தார்.

இதனடிப்படையில் முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 59 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றவுடன் தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில்,

ஹசான் – 61(10 fours)
தர்சிகாந் – 50(6 fours) (1 six)
கிருசாந் – 42 (3 fours) (3 sixes) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்,

மதுசன் – 5 விக்கெட்டுக்கள்
பானுகோபன் – 3 விக்கெட்டுக்களை பெற்றனர்.

இதன் பின் முதல் இனிங்ஸில் 202 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தை விரைவாக கொண்டு சென்ற யாழ் இந்துக் கல்லூரி அணியினால் 31 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 183 ஓட்டங்களையே பெற முடிந்தது. காரணம் இன்றைய நாளிற்குரிய ஓவர்கள் நிறைவடைந்துவிட்டமை. இதனால் இப் போட்டியானது சமனிலையில் முடிவுற்றது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் ,

மதுசன் – 91 (13 fours) (3 sixes)
கல்கோகன் – 47 (6 sixes)

பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில்,

திவாகரன் – 4 விக்கெட்டுக்கள்.

இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது ஹசானிற்க்கும் (C.H.C), சிறந்த பந்துவீச்சாளர் விருது மதுசனிற்க்கும் (J.H.C), சிறந்த களத்தடுப்பாளர் விருது கிருசானிற்கும் (C.H.C), இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது மதுசனிற்க்கும் (J.H.C) வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் இப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆட்டநாயகனிற்கு லண்டன் பழைய மாணவர் சங்கத்தினூடாக நக்கீரன் அவர்களினால் ரூபா 10,000 பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ”இந்துக்களின் மாபெரும் போர்” யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

13
14
15
16
1

2 3 4 5(1) 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

Sorry, the comment form is closed at this time.