Google

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் மீண்டும் ஆரம்பமாகவிருக்கும் ”இந்துக்களின் போர் ”

Written on:April 30, 2013
Comments are closed

942278_640149786011492_1116032782_nஇந்துக்களின் மாபெரும் போர் எனப் பெருமையாக அழைக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கும், இந்துக் கல்லூரி,கொழும்பு 04 அணிக்குமிடையிலான கிரிக்கெட் தொடர் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

இந்தப் போட்டி மீள ஆரம்பிப்பது கடந்தகாலங்களில் இடைநிறுத்தப்பட்டகிரிக்கெட் பாரம்பரியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமையவுள்ளது.இவ்வருடத்துக்கான போட்டிகள் எதிர்வரும் மே 3ம், 4ம் திகதிகளில் இந்துக் கல்லூரி,கொழும்பு 04 மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

VV

1982ம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட  இந்த இந்துக்களின் மாபெரும் போர்,முதன்முறையாக இந்துக் கல்லூரி,கொழும்பு 04 மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வருடப் போட்டி 1983ம் ஆண்டு இடம்பெற்றிருந்ததோடு,அப்போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
ஆனால் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும்,கொழும்பிற்குமிடையிலான பயணம் கடினமானதாக மாறியதைத் தொடர்ந்து இந்த இந்துக்களின் மாபெரும் போர் தொடர் நடாத்தப்படாது விடப்பட்டிருந்தது.

அதற்குப் பின்னர் 1996ம் ஆண்டுக்குப் பின்னர் 2007ம் ஆண்டு வரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இரு அணிகளும் ‘Big Match’  ‘100 வருடச் சவால்க் கிண்ணம்’ போன்ற பெயர்களில் போட்டிகளில் மோதியிருந்தாலும்,அப்போட்டிகள் ‘இந்துக்களின் மாபெரும் போர்’ என்ற பெயரில்,பழைய பாரம்பரியத்துக்கு அமைவாக நடாத்தப்பட்டிருக்கவில்லை. அப்போட்டிகளைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கான உறுதியான முடிவுகளும் காணப்பட்டிருக்கவில்லை.2007ம் ஆண்டு இறுதியுத்தம் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இப்போட்டிகளைநடாத்துவதற்கானவாய்ப்புக்கள் காணப்பட்டிருக்கவில்லை.

நாட்டில் போர் நிலைமை இல்லாது போயுள்ளநிலையில், 30 வருடங்களின் பின்னர்,கைவிடப்பட்ட பாரம்பரியத்தை மீண்டும் தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு,அம்முயற்சிகள் கைகூடியுள்ளன. வடக்கிற்கும்,மேற்கிற்குமிடையிலான இந்தப் போட்டிகள் இரு பகுதிகளுக்குமிடையிலான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு தொடர்ந்து வரும் காலங்களிலும் இந்தத் தொடரைத் தொடர்ந்தும் நடாத்துவதற்கான முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு பலமானஅணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை ரசிகர்களாகக் கொண்ட ஆதரவு,பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு,நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், இந்துக் கல்லூரி கொழும்பு 04 இற்குமிடையிலான இந்த இந்துக்களின் மாபெரும் போரைஅதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றுகின்றன.

Sorry, the comment form is closed at this time.