Google

கொழும்பு ஆனந்தாக் கல்லூரியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது யாழ் இந்துக் கல்லூரி…

Written on:April 27, 2013
Comments are closed

IMG_1907யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் இடையிலான வி.ரீ.எஸ்.சிவகுருநாதன் வெற்றிக்கிண்ணத்துக்கான இரண்டாவது வருடாந்த நட்புறவு கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இதனடிப்படையில் யாழ் இந்துக் கல்லூரி 8 விக்கெட்டுக்களால் ஆனந்தா கல்லூரியை வீழ்த்தி இப் போட்டியில் வெற்றி கொண்டது.

இப் போட்டி பற்றிய முழு விபரம் :

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணித்தலைவர் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தார்.
இதனடிப்படையில் முதல் இனிங்ஸல் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஆனந்தா கல்லூரி 50.2 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆனந்தா கல்லூரி அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய

Lakkana Jeyasekar – 64 (9 fours)
Danuka Madushan- 49 (7 fours)
Sammu Ashan – 26 (2 fours, 2 sixes)  ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்

Vamanan – 3 Wickets
Mathusan – 3 Wickets
Sharangan – 2 Wickets

இதன் பின் முதல் இனிங்ஸில் 209 ஓட்டங்களை பெற வேண்டும் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வரும் யாழ் இந்து அணி முதலாம் நாள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 121 ஓட்டங்களை பெற்ற நிலையில் முதல் நாள் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.

இதன் பின் இன்றைய தினம் தனது துடுப்பாட்டத்தை  தொடர்ந்த யாழ் இந்துக் கல்லூரி 50.2 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 206 ஓட்டங்களை பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

Sajeekan – 68 (11 fours)
Vamanan – 44 (36 balls) (5 sixes, 1 four)
Jasminan – 27 (4 fours, 1 six) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஆனந்தா கல்லூரி சார்பில்

Tharana Ravinthu – 3 Wickets
Dileepa Jeyalath – 2 Wickets
Isuru Kunasekara – 2 Wickets
Dushmantha Dissanayakke – 2 Wickets

இதன் பின் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த ஆனந்தா கல்லூரி 31.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.

ஆனந்தா கல்லூரி அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய

Lakkana Jeyasekar – 30 (3 fours, 2 sixes)
Thamalakka Athulathmuthali – 21 (2 fours, 1 sis)
Dileepa Jeyasekara – 11* ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில்

Vamanan – 6 Wickets
Mathusan – 3 Wickets
Jasminan – 1 Wickets

பின்னர் 103 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்துக் கல்லூரி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டை மாத்திரம் இழந்து 105 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை அடைந்து இப் போட்டியை வெற்றி கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து சார்பில் :

Kalkohan – 58*(7 fours, 1 six)
Sajeekan – 19* (1 four)
Mathusan – 17 (3 fours) ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் ஆனந்தா கல்லூரி சார்பில்

Dileepa Jeyalath – 1 Wickets

இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருது சஜீகனுக்கும் (J.H.C), சிறந்த பந்துவீச்சாளர் விருது வாமணனுக்கும் (J.H.C), சிறந்த களத்தடுப்பாளர் விருது தரண ரவீந்துவிற்கும் (C.A.C), இப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வாமணனுக்கும் (J.H.C) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

IMG_1893
IMG_1894
IMG_1896
IMG_1897

இப் போட்டியில் யாழ் இந்து சொந்த மண்ணில் வெற்றி கொண்டதைப் போன்று சென்ற வருடம் நடைபெற்ற போட்டியில் ஆனந்தா கல்லூரி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1742 IMG_1745 IMG_1747 IMG_1749 IMG_1752 IMG_1753 IMG_1757 IMG_1758 IMG_1762 IMG_1764 IMG_1765 IMG_1768 IMG_1770 IMG_1771 IMG_1776 IMG_1778 IMG_1781 IMG_1790 IMG_1791 IMG_1801 IMG_1802 IMG_1806 IMG_1807 IMG_1809 IMG_1811 IMG_1812 IMG_1814 IMG_1816 IMG_1819 IMG_1822 IMG_1823 IMG_1824 IMG_1826 IMG_1829 IMG_1834 IMG_1835 IMG_1836 IMG_1838 IMG_1843 IMG_1844 IMG_1845 IMG_1846 IMG_1848 IMG_1849 IMG_1850 IMG_1851 IMG_1852 IMG_1853 IMG_1856 IMG_1857 IMG_1858 IMG_1862 IMG_1864 IMG_1865 IMG_1872 IMG_1875 IMG_1877 IMG_1878 IMG_1879 IMG_1885 IMG_1887 IMG_1888 IMG_1890 IMG_1893 IMG_1894 IMG_1896 IMG_1897 IMG_1898 IMG_1903 IMG_1904 IMG_1905 IMG_1907 IMG_1910 IMG_1912 IMG_1917 IMG_1921 IMG_1925 IMG_1927 IMG_1931 IMG_1934 IMG_1939 IMG_1954

Sorry, the comment form is closed at this time.