எமது கல்லூரியில் கற்பித்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களுக்கும் இன்றைய தினம் அவர்களை கௌரவிக்கும் நோக்கில் பிரியாவிடை வைபவம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் ஓய்வு பெற்று சென்ற ஆசிரியர் என்ற அடிப்படையில் திரு.மு.சிவதாசனும், இடமாற்றம் பெற்று சென்றவர்களான திரு.சொ.சோதிலிங்கம், திரு.சு.மகேஸ்வரன், திரு.ஐ.பாஸ்கரன், திருமதி.சா.அருந்தவபாலன், திரு.சி.செல்வராஜா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் இந் நிகழ்வில் பிரியாவிடைபெற்று சென்றவர்களை வாழ்த்தி வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் அவர்களுக்கு பொற்கிளியும் நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதன் பின் நன்றியுரையினை தொடர்ந்து மதியபோசன நிகழ்வுடன் அன்றைய நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
Google
இன்றைய தினம் யாழ் இந்துவில் நடைபெற்ற பிரியாவிடை வைபவம்
Written on:April 2, 2013
Comments are closed
In category: Events
Sorry, the comment form is closed at this time.