Google

யாழ் இந்துக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டி -2013

Written on:February 20, 2013
Comments are closed

DSC_0436யாழ் இந்துக்கல்லூரியின் 2013 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 19.02.2013 அன்று கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துக் கல்லூரியின் பழையமாணவனும், பிரித்தானியா பழைய மாணவர் சங்க  செயலாளர் திரு.செல்வத்துரை தேவராஜா அவர்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வை சிறப்பித்தார். முதல் நிகழ்வாக சிவஞான வைரவர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின் அதனை தொடர்ந்து பான்ட் வாத்தியங்கள் முழங்க பிரதம விருந்தினர் மற்றும் ஏனைய விருந்தினர்களும் மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

பான்ட் வாத்திய அணியை தொடர்ந்து கல்லூரி மாணவ முதல்வர் அணியும், அதன் பின் ஒவ்வொரு இல்லங்களுக்குமான அணிநடைக் குழுக்களும் மைதானத்தை வலம் வந்தார்கள். இதன் பின்னர் தேசியக் கொடி, கல்லூரிக் கொடி, இல்லங்களின் கொடிகளும் ஏற்றப்பட்டன. இதனை தொடர்ந்து விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை செய்த விளையாட்டுத் துறை வீரன் ஜஸ்மினனால் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

இடையிடையே விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இடைவேளை நிகழ்வாக மாணவர்களுடைய உடற்பயிற்சி கண்காட்சி நடைபெற்றது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாக இருந்தது. பின் பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பிரதம விருந்தினரினால் ஒவ்வொரு விளையாட்டுக்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டது. இதன் பின் இறுதியாக அவர் இந்த மெய்வல்லுநர் போட்டியில் 483 புள்ளிகளை பெற்ற செல்லத்துரை இல்லத்துக்கு வெற்றிக் கேடயத்தை வழங்கிக் கௌரவித்தார்.

இவ் வருடம் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் 483 புள்ளிகளை பெற்று சபாபதி இல்லம் முதலாம் இடத்தினையும், 453 புள்ளிகளை பெற்று பசுபதி இல்லம் இரண்டாம் இடத்தினையும், 425 புள்ளிகளை பெற்று நாகலிங்கம் இல்லம் மூன்றாம் இடத்தினையும், 370 புள்ளிகளுடன் செல்லத்துரை நான்காம் இடத்தினையும், 294 புள்ளிகளுடன் காசிப்பிள்ளை ஐந்தாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.

DSC_0023 DSC_0038 DSC_0069 DSC_0071 DSC_0086 DSC_0088 DSC_0104 DSC_0121 DSC_0126 DSC_0132 DSC_0141 DSC_0151 DSC_0161 DSC_0173 DSC_0201 DSC_0234 DSC_0235 DSC_0252 DSC_0261 DSC_0264 DSC_0322 DSC_0325 DSC_0326 DSC_0327 DSC_0328 DSC_0330 DSC_0333 DSC_0335 DSC_0339 DSC_0342 DSC_0348 DSC_0351 DSC_0352 DSC_0353 DSC_0354 DSC_0355 DSC_0357 DSC_0358 DSC_0359 DSC_0360 DSC_0361 DSC_0362 DSC_0363 DSC_0366 DSC_0368 DSC_0370 DSC_0372 DSC_0374 DSC_0376 DSC_0377 DSC_0378 DSC_0380 DSC_0381 DSC_0385 DSC_0389 DSC_0392 DSC_0395 DSC_0401 DSC_0409 DSC_0410 DSC_0413 DSC_0414 DSC_0415 DSC_0416 DSC_0417 DSC_0418 DSC_0426 DSC_0427 DSC_0428 DSC_0429 DSC_0430 DSC_0432 DSC_0436 DSC_0437 DSC_0438 DSC_0439 DSC_0441 DSC_0442 DSC_0443 DSC_0446 DSC_0448 DSC_0450 DSC_0458 DSC_0460 DSC_0463 DSC_0464 DSC_0465 DSC_0474 DSC_0475 DSC_0480 DSC_0485 DSC_0489 DSC_0491 DSC_0492 DSC_0493 DSC_0494 DSC_0495 DSC_0499 DSC_0501 DSC_0502 DSC_0503 DSC_0504 DSC_0506 DSC_0507 DSC_0508 DSC_0509 DSC_0510 DSC_0511 DSC_0512 DSC_0513 DSC_0514 DSC_0515 DSC_0520 DSC_0521 DSC_0522 DSC_0523 DSC_0524 DSC_0526 DSC_0527 DSC_0528 DSC_0529 DSC_0530 DSC_0531 DSC_0532 DSC_0533 DSC_0534 DSC_0536 DSC_0537 DSC_0539 DSC_0540 DSC_0541 DSC_0543 DSC_0545 DSC_0547 DSC_0548 DSC_0549 DSC_0550 DSC_0551 DSC_0552 DSC_0553 DSC_0554 DSC_0555

Sorry, the comment form is closed at this time.