Google

வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பழைய சாதனைகள் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

Written on:February 16, 2013
Comments are closed

IMG_7129தற்போது நடைபெற்று வரும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இது வரை புதிதாக 7 சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து மேலும் 2 சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதன் விபரம்:

16 வயதுக்குட்பட்ட 100 M தடைதாண்டல் நிகழ்வில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த விதுசன் 16:50 எனும் நேரத்தில் ஓடி முடித்து சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 1978 ஆம் ஆண்டில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த க.பாலகுமார் என்பவரால் 17:00 எனும் நேரத்தில் ஓடி முடித்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது.

19 வயதுக்குட்பட்ட 5000 M ஓட்டத்தில் செல்லத்துரை இல்லத்தை சேர்ந்த சிவகாந் 19நி:34செ:25 எனும்  நேரத்தில் ஓடி முடித்து சாதனையை நிலைநாட்டினார்.
இதற்கு முன் 2002 ஆம் ஆண்டில் நாகலிங்கம் இல்லத்தை சேர்ந்த க.தர்சன் என்பவரால் 19நி:43செ:00 எனும் நேரத்தில் ஓடி முடித்தமையே இதுவரையும் சாதனையாக இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

Sorry, the comment form is closed at this time.